இந்திய ரிசர்வ் வங்கி இன்று 4 வங்கி அல்லாத நிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது.
எனினும் இந்த பதிவு ரத்துக்கு மத்திய வங்கி எந்த காரணத்தையும் அறிவிக்கவில்லை.
நான்கு நிதி நிறுவனங்களில் எஸ் ஆர் எம் ப்ராபர்டீஸ் அண்ட் பைனான்ஸ் நிறுவனம் (SRM properties and Finance company), நார்த் ஈஸ்ட் ரிஜீன் ஃபின்சர்வீசஸ் (North East Region Finservices), சவுஜென்வீ பைனான்ஸ் (Sowjenvee Finance) மற்றும் ஓப்பல் பைனான்ஸ் (Opel Finance) உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
பதிவு சான்றிதழ் ரத்து
இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
விதிமுறைகளை
சமீபத்திய காலமாக இன்ஸ்டன்ட் லோன் ஆப்களை பயன்படுத்தி, கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதன் மூலம் நடக்கும் மோசடியும் அதிகரித்துள்ளது. இதனால் கடன் வாங்கியவர்கள் பலரும் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில் நிதி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறியுள்ள நிலையில், நிதி நிறுவனத்தின் உரிமத்தினை ரத்து செய்யும் நடவடிக்கையினை ஆர்பிஐ எடுத்திருக்கலாம் என தெரிகிறது.
சான்றுகள் சரண்டரா?
அஷ்வினி இன்ஸ்வெஸ்ட்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (Ashwini Investment Private Limited,), ஆர் எம் செக்யூரிட்டீஸ் (RM Securities), அமிட்டி பைனான்ஸ் (Amity Finance) மற்றும் மேட்ரிக்ஸ் மெர்ச்சண்டைஸ் (Matrix Merchandise) உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுவன சான்றிதழை திரும்ப கொடுத்துள்ளதாகவும் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லெண்டிங் நிறுவனங்களுக்கான விதிமுறைகள்
தொடர்ந்து டிஜிட்டல் லெண்டிங் ஆப்களில் அதிகரித்து வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஜனவரி 2021ல் ரிசர்வ் வங்கி ஒரு குழுவை அமைத்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நலனை காப்பாற்ற ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையினை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் லெண்டிங் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
வெளிப்படை தன்மை
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை வங்கிகள், நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் லெண்டிங் ஆப்கள் வெளிப்படை தன்மையுடன் இருப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications