புனே: இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் ரிசர்வ் வங்கியின் பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றாமல் உள்ளது, இதைச் சரி செய்யத் தொடர்ந்து கண்காணிப்பிலும், ஆய்விலும் ரிசர்வ் வங்கி உள்ளது.
இந்த நிலையில் பொருளாதாரம், வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் மூலம் பல சிறிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு வங்கிகளின் உரிமத்தை ரத்துச் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது சேவா விகாஸ் கோ ஆப்ரேட்டிவ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது ஆர்பிஐ.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் புனே-வை சேர்ந்த சேவா விகாஸ் கோ ஆப்ரேட்டிவ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இவ்வங்கியிடம் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் அளவிற்குப் போதுமான பணம் இல்லாத காரணத்தாலும், கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கு வாய்ப்பு இல்லாத காரணத்தாலும் ஆர்பிஐ தீவிர ஆலோசனைக்குப் பின்பு வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளது.
சேவா விகாஸ் கோ ஆப்ரேட்டிவ் வங்கி
இந்த அறிவிப்பு மூலம் சேவா விகாஸ் கோ ஆப்ரேட்டிவ் வங்கி அக்டோபர் 10ஆம் தேதி முதல் எவ்விதமான வங்கி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகள்
சமீபத்தில் அதிகப்படியான கூட்டுறவு வங்கிகள் இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொண்டு வங்கி உரிமத்தை இழந்து வருகிறது. இதனால் மக்களின் பாடு திண்டாட்டமாக மாறியுள்ளது.
DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்பு
சேவா விகாஸ் கோ ஆப்ரேட்டிவ் வங்கி மற்றும் ஆர்பிஐ வங்கி அடிப்படையில் இவ்வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளவர்களில் 99 சதவீதம் பேர DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் இக்கூட்டுறவு வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளவர்கள் பணத்தைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. யாருக்கெல்லாம் பணம் கிடைக்காது..?
உதாரணம்
DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்புக் கீழ் ஒரு வங்கியில் 5 லட்சம் வரையிலான தொகைக்குப் பாதுகாப்பு கிடைக்கும். அதாவது ராஜா என்பவர் 6 லட்சம் ரூபாயும், ரவி என்பவர் 4 லட்சம் ரூபாயும் ஒரு வங்கியில் டெபாசிட் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். இப்போது அந்த வங்கி திவால் ஆனாலோ அல்லது ஆர்பிஐ இதுபோன்று வங்கி உரிமத்தை ரத்து செய்தாலோ DICGC பாதுகாப்பு முக்கியமானதாக இருக்கும்.
5 லட்சம் ரூபாய் மட்டுமே..!
இதில் DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்புக் கீழ் 5 லட்சம் வரையிலான தொகைக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் ராஜா தனது 6 லட்சம் ரூபாய்க்கு 5 லட்சம் ரூபாய் மட்டுமே பெறுவார், ரவி தனது மொத்த தொகையான 4 லட்சம் ரூபாய் தொகையும் பெறுவார். இதன் மூலம் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது எந்தொரு வங்கியாக இருந்தாலும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யக் கூடாது என்பது தான்.
More From GoodReturns

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications