மகாராஷ்டிராவை சேர்ந்த இந்த வங்கியின் லைசென்ஸ் ரத்து.. டெபாசிட்டர்களின் நிலை என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் சிவாஜிராவ் போசாலே சஹாகரி வங்கி லிமிட்டெட் நிறுவனத்தின், வங்கி உரிமத்தினை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

 

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வங்கியில் போதுமான மூலதனம் இல்லாததாலும், வருவாய் இல்லாமையாலும் உரிமத்தினை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கிரீன் கார்டு கட்டுப்பாட்டில் மிகப்பெரிய தளர்வு.. இந்தியர்களுக்கு அடித்தது யோகம்.. இனி ரொம்ப ஈசி..! கிரீன் கார்டு கட்டுப்பாட்டில் மிகப்பெரிய தளர்வு.. இந்தியர்களுக்கு அடித்தது யோகம்.. இனி ரொம்ப ஈசி..!

மே 28,2021 தேதியிட்ட உத்தரவின் படி, மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த சிவாஜிராவ் போசாலே சகாரி வங்கி லிமிடெட் நிறுவனத்தின் உரிமத்தினை ரத்து செய்துள்ளது.

வங்கி உரிமம் ரத்து

வங்கி உரிமம் ரத்து

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் வங்கி வணிகத்தினை மேற்கொள்வதை நிறுத்திக் கொண்டுள்ளதாகவும், இதே மே 31, 2021வுடன் வணிகத்தினை மூடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இது போன்ற அடுத்தடுத்த வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்படுவது அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது நினைவு கூறத்தக்கது.

என்ன காரணம் ?

என்ன காரணம் ?

மகாராஷ்டிராவைக் தளமாகக் கொண்ட இந்த வங்கியின் உரிமத்தினை ரத்து செய்தற்காக, பல காரணங்களை மேற்கோளிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. குறிப்பாக வங்கி போதிய மூலதனம் மற்றும் வருமானம் இல்லை. இது வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949ன் பிரிவு 56 உடன் படித்த பிரிவு 11(1) மற்றும் பிரிவு 22(3) விதிகளுக்கு இணங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விதிகளை பின்பற்றவில்லை
 

இந்த விதிகளை பின்பற்றவில்லை

இது தவிர பிரிவு 22(3)(3) (a), 22(3)(b), 22(3)(c), 22(3)(d) மற்றும் 22(3)(e) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வங்கியானது இணங்க தவறி விட்டது. அதோடு 1956ன் பிரிவு 56ன் கீழ், ரிசர்வ் வங்கி, ஏற்கனவே வழிகாட்டுதல் உத்தரவினை பிறப்பித்திருந்தது. இதனால் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் கீழ் இவ்வங்கியானது இருந்தது.

மக்கள் நலன் முக்கியம்

மக்கள் நலன் முக்கியம்

மேலும் இவ்வங்கியின் டெபாசிட்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கையின ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் இவ்வங்கியால் டெபாசிட்தாரர்களுக்கு வைப்பு தொகையை முழுமையாக செலுத்த முடியாது. ஆக இவ்வங்கி, மேற்கொண்டு வங்கி தொழிலை தொடர்ந்தால், வாடிக்கையாளர்களின் நலன் பாதிக்கப்படும்.

பணம் என்ன ஆகும்?

பணம் என்ன ஆகும்?

இவ்வங்கியின் உரிமம் ரத்தும் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற நடவடிக்கைகளை விரைவில் தொடங்கும் என அறிவித்துள்ளது. டெபாசிட்தாரர்களுக்கு 1961ன் படி பணம் செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது மொத்த டெபாசிட்தார்களில் 98% பேர் Deposit Insurance and Credit Guarantee Corporation மூலம் தொகையை திரும்ப பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

ரூ.5 லட்சம் வரை பெறலாம்

ரூ.5 லட்சம் வரை பெறலாம்

ஆக DICGC கீழ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்டினை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதனால் மக்களின் டெபாசிட் பணம் முழுமையாகக் கிடைக்கும். யாரும் பயப்பட தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் 5 லட்சம் ரூபாய் வரையில் தான் இந்த திட்டத்தில் திரும்ப பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI cancels licence of Shivajirao Bhosale Sahakari Bank Ltd in maharastra

RBI latest updates.. RBI cancels licence of Shivajirao Bhosale Sahakari Bank Ltd in maharastra
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X