இந்தியாவில் அடுத்தடுத்து வங்கிகள் வர்த்தகம் செய்வதற்கும், மக்களுக்குச் சேவை அளிப்பதற்குமான தகுதியை இழந்து வருகிறது என்பதை உண்மையாக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருந்து வந்த யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியிடம் போதிய நிதி ஆதாரங்களும், வருமானம் ஈட்டுவதற்கான காரணிகளும் இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கி இக்கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
அப்போ வங்கியில் டெபாசிட் செய்துள்ள மக்களின் நிலை என்ன..?
மேற்கு வங்க வங்கி
ரிசர்வ் வங்கி, மேற்கு வங்க மாநிலத்தின் பாக்நன் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியின் நிதிநிலை பல மாதங்களாக ஆய்வு செய்து வருகிறது, இதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிலேயே பல நாட்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் உரிமம் ரத்து
இந்தச் சூழ்நிலையில் தான் இக்கூட்டுறவு வங்கியிடம் மக்களுக்குத் தங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் அளவிற்குக் கூட நிதி ஆதாரங்கள் இல்லை என்றும், புதிய வருமானம் ஈட்டுவதற்கான திறனும் வாய்ப்புகள் இல்லை என்பதால் ரிசர்வ் வங்கி யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
5 லட்சம் ரூபாய் வரை
யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியின் உரிமம் ரத்துசெய்யப்பட்டு உள்ளதால் மக்கள் பயப்படத் தேவையில்லை, காரணம் Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) கீழ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் வழங்கப்படுகிறது. இதனால் மக்களின் பணம் முழுமையாகக் கிடைக்கும்.
சொத்துக்கள் விற்பனை
இவ்வங்கியின் வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் கொடுக்க முடியாத நிலையில் இக்கூட்டுறவு வங்கி இருப்பதால், இவ்வங்கி சொத்துக்களை விற்பனை செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி
வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ள காரணத்தால் யுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கியால் இனி எவ்விதமான வங்கி சேவைகளும் அளிக்க முடியாது. குறிப்பாகக் கடன் அளிக்கவோ, அல்லது டெபாசிட் வழங்கவோ முடியாது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications