2024 முதல் 2025-ஆம் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த நிதியாண்டின் இறுதி நாளன்று வருமானவரித்துறை அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி அன்று பண்டிகை காலம் வருவதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற குழப்பம் நிலவியது.
நிதி அறிக்கையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை தவிர்க்கவும், 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டின் அனைத்து பரிவர்த்தனைகளும் அதே நாளில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி அன்று வங்கிகள் திறந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அன்றைய தினம் பல மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 31, 2025 அன்று ஏன் விடுமுறை வழங்கப்பட்டது?: இமாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் மார்ச் 31-ஆம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகைக்கு வங்கிகள் மூடப்படவிருந்தன.
மார்ச் 31, 2025 அன்று முடிவடையும் 2024-25-ஆம் நிதியாண்டிற்கான, ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகள் உட்பட அரசின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் முறையாகக் கணக்கிடப்படுவதை உறுதி செய்வதற்காக அன்றைய தினம் வங்கிகள் திறந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு நிதியாண்டின் இறுதி பரிவர்த்தனைகள்: ஒவ்வொரு வருடமும் மார்ச் 31-ஆம் தேதி என்பது ஒரு நிதியாண்டின் முடிவைக் குறிக்கிறது. அதாவது அரசாங்க வருவாய், பணம் செலுத்துதல் மற்றும் பிற பரிவர்த்தனைகளும் புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.
மார்ச் 31, 2025 அன்று எந்த வங்கிச் சேவைகள் கிடைக்கும்?: மார்ச் 31-ஆம் தேதி அன்று பின்வரும் வங்கிச் சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி, ஜிஎஸ்டி, சுங்கம் மற்றும் கலால் வரிகள் உள்ளிட்ட அரசு வரி செலுத்துதல்கள்
ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் அரசு மானியங்கள், அரசு சம்பளம், அரசு திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பான பொது பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
ஏப்ரல் 1, 2025 விடுமுறை: ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, மேகாலயா, சத்தீஸ்கர், மிசோரம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயா தவிர, பெரும்பாலான யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கிகள் மூடப்படும்.
அதோடு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வழக்கம் போல செய்ய முடியும். ஆன்லைன் இணையதளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பல்வேறு சேவைகளை பெற முடியும்.


Click it and Unblock the Notifications