இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் நான்கு NBFC நிறுவனங்களின் பதிவுச் சான்றுகளை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ கடந்த சில வருடங்களாக வங்கியின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
RBI-யின் நேற்றைய அறிவிப்பின் படி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கண்டில்ஸ் மோட்டார் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யா ஃபைனான்ஸ் லிமிடெட், பஞ்சாபைச் சேர்ந்த பாதியா ஹயர் பர்சேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஜிவான்ஜோதி டெபாசிட்ஸ் அண்ட் அட்வான்சஸ் லிமிடெட் ஆகிய 4 NBFC நிறுவனங்களின் ரிஜிஸ்ட்ரேஷனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இந்த 4 நிறுவனங்கள் இனி ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் NBFC செயல்பாடுகள் என வரையறுக்கப்பட்டுள்ள, எந்த வர்த்தகத்தையும் செயல்பாடுகளையும் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.
நித்யா ஃபைனான்ஸ் லிமிடெட்: zaubacorp தளத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகள் படி, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிதி நிறுவனமான நித்யா ஃபைனான்ஸ் நிறுவனம் 1987 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
நித்யா ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கி அல்லாத பிற பிற நிதி சேவைகளை வழங்கும் நிறுவனமாக இயங்கி வந்துள்ளதாக zaubacorp தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.2.5 கோடி (₹25,000,000) ஆகும். செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.74.69 லட்சம் (₹7,469,700) ஆகும்.
நிறுவனத்தின் இயக்குநர்களாக ராஜலக்ஷ்மி கோவிந்தசாமி நாயுடு, ரவீந்திரன் கெங்கசாமி, வெங்கடசுப்ப நாயுடு கெங்கசாமி மற்றும் துரைசாமி செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர். இது அனைத்தும் ஏப்ரல் 26, 2023ல் அப்டேட் செய்யப்பட்ட தகவலாகும்.
இந்நிறுவனத்தின் பதிவு எண் 7600 மற்றும் கார்ப்பரேட் அடையாள எண் (CIN) U65910TZ1987PLC007600. நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி 132 பழனி ரோடு, எஸ்.வி. மில்ஸ் போஸ்ட், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு 642128 ஆகும்.
இதற்கிடையில், ரிசர்வ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி லிமிடெட்டிற்கு (வங்கி) ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் "கடனங்கள் மற்றும் முதலீடுகள் - சட்ட மற்றும் பிற கட்டுப்பாடுகள்" குறித்த மத்திய வங்கியால் வழங்கப்பட்ட சில விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக விதிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இந்த அபராதம் 1949 ஆம் ஆண்டு வங்கிச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் பின்பற்றப்படாதது குறித்து ஆர்பிஐ தனது ஆய்வில் கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பி, வங்கி தரப்பில் இருந்து தனிப்பட்ட விசாரணையின் போது வழங்கப்பட்ட வாய்வழி விளக்கங்களையும் கருத்தில் கொண்ட பின்னர், வங்கி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்க வேண்டி இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் ஆர்பிஐ, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது 49.70 லட்சம் ரூபாயை விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்திற்காக அபராதம் விதித்துள்ளது.
இறுதியாக rowing Opportunity Finance (India), Invel Commercial, Mohan Finance, Saraswati Properties, Quicker Marketing ஆகிய 5 NBFC நிறுவனங்கள் தானாக முன்வந்து தனது பதிவுச் சான்றுகளை ரத்து செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications