வசமாக சிக்கிக்கொண்ட RBI.. ரூ.12 லட்சம் கோடி வந்ததே என்ன ஆச்சு தெரியுமா..?

இந்திய அரசு ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு இருக்கும் சரிவை சரி செய்ய ஆர்பிஐ மற்றும் இந்திய வங்கிகளுடன் இணைந்து மிகப்பெரிய FCNR வைப்பு நிதி திட்டத்தைச் செயல்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாகவும், கடன் வாயிலாகவும் சுமார் 136 பில்லியன் டாலர் தொகையை டாலராகவும், பவுண்டாகவும், யூரோவாகவும் முதலீடு செய்தனர்.

இது 2013 ஆம் ஆண்டு ரகுராம் ராஜன் கொண்டு வந்த FCNR வைப்பு நிதி திட்டத்தின் வாயிலாகத் திரட்டப்பட்ட 26 பில்லியன் டாலர் தொகையை விட 5 மடங்கு அதிகம். இது பெரும் தொகையாகப் பார்க்கப்பட்டாலும் இதனால் எந்த பயனும் இல்லாமல் இந்த 12 லட்சம் கோடி ரூபாய் நிதி ஆர்பிஐ-க்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

வசமாக சிக்கிக்கொண்ட  RBI.. ரூ.12 லட்சம் கோடி வந்ததே என்ன ஆச்சு தெரியுமா..?

பொதுவாக இந்திய வங்கி அமைப்பில் அதிகப்படியான பண இருப்பு இருந்தாலோ அல்லது பணம் வந்தாலோ நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் மேம்படுத்த வங்கிகளும், ஆர்பிஐயும் ஹோம் லோன் உட்பட அனைத்து கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும்.

ஆனால் தற்போது 12 லட்சம் கோடி ரூபாய் வந்தும் வட்டியைக் குறைக்க முடியாத நிலையில் ஆர்பிஐ சிக்கியுள்ளது. ஏன் தெரியுமா..? ஒருபக்கம் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாமல் தவிக்கும் இதேவேளையில், இந்தியப் பத்திரம் மீதான லாபம் 7 சதவீதமாகவும், தொடர்ந்து உயர்ந்தும் வருகிறது.

பத்திர சந்தையில் இருக்கும் செக்:

உலகிலேயே மிகவும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்கப் பத்திரங்களில் 10 ஆண்டு முதலீட்டுக் காலம் கொண்ட பத்திரங்களுக்கு 4.81 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கிறது, இது இந்தியாவைக் காட்டிலும் 2.14 சதவீதம் மட்டுமே அதிகம்.

ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவுக்குப் பணத்தைக் கொண்டு வரும் போது, இந்தியா ரூபாய் மதிப்பில் ஏற்படும் தடுமாற்றம், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சிக்கலால் ஏற்படும் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது 2.14 சதவீதம் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும் காரணத்தால் மட்டுமே இந்தியச் சந்தையில் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகள் நிலைபெறும், இந்த வட்டி gap குறைந்தால் முதலீடுகள் வெளியேறும்.

ஆர்பிஐ வட்டி குறைத்தால் என்னாகும்..?

FCNR வைப்பு நிதி மூலம் இந்திய வங்கிகள் பெற்ற 12 லட்சம் கோடி ரூபாய் நிதியை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் கனவிலும் எதிர்பார்க்காத domino effect பாதிப்பு ஏற்படும்.

தற்போது ஆர்பிஐ வட்டி விகிதம் குறைத்தால், உடனடியாக பத்திர முதலீட்டின் லாபம் குறையும், இது அமெரிக்கப் பத்திர முதலீட்டுக்கும் - இந்தியப் பத்திர முதலீட்டுக்கும் தற்போது இருக்கும் 2.14 சதவீத Gap-ஐ குறைக்கும்.

இந்த Gap குறைந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையை விட்டு முதலீட்டை வெளியேற்றுவார்கள், இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் குறையும்.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகக் கூடுதல் பணத்தை கொடுக்க வேண்டியிருக்கும், இதனால் பணவீக்கம் அதிகமாகும். பணவீக்கம் அதிகமானால் ஆர்பிஐ இதைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டியிருக்கும்.

இது அனைத்தும் பெரும் சிக்கலில் ரிசர்வ் வங்கியைத் தள்ளும் என்பதால் FCNR வைப்பு நிதி மூலம் பெற்றப்பட்ட 12 லட்சம் கோடி ரூபாய் தொகை எவ்விதமான பலனும் அளிக்காமல் வங்கி அமைப்பில் சிக்கிக்கொண்டு உள்ளது.

இந்த 12 லட்சம் கோடி ரூபாயை கட்டுமானம், வளர்ச்சி திட்டங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டுமாயின் வட்டி விகிதம் குறைப்பதன் மூலம் மக்களை அதிகம் கடன் வாங்க வைப்பதன் வாயிலாகவே செய்ய முடியும், வட்டி குறைந்தால் domino effect ஏற்படும் என்பதால் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் பெரும் சுமையாக மாறியுள்ளது.

அக்டோபர் மாதம் 5-7 ஆம் தேதிகளில் நடக்கும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பலன் பெறப்போவது யாரென்றால் வைப்பு நிதியில் முதலீடு செய்தவர்கள், அடுத்த சில காலத்திற்கு வட்டி விகிதம் குறையாது என்பதால் FD-யில் முதலீடு செய்தவர்களுக்கு நிலையான லாபம் கிடைக்கும். அடுத்தாக FCNR வைப்பு நிதியில் முதலீடு செய்தவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம், முதலீட்டுச் சந்தை எப்படி நகர்ந்தாலும் நிலையான 5.75% முதல் 7.1% வரையிலான வட்டி வருமானம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+