ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு இன்று கூட்டம் நடைபெற்றது. அதில், தொடர்ந்து பத்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை 6.5% ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. அதேபோல், பல மாற்றங்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, UPI 123PAY இல் ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், UPI Lite வாலட் வரம்பு ரூ.2,000லிருந்து ரூ.5,000 ஆகவும், ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ 123 பே மற்றும் யுபிஐ லைட் வாலட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் வரம்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். யுபிஐ123பே என்பது ஃபீச்சர் ஃபோன் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட உடனடி கட்டண முறை ஆகும்.

தற்போது UPI மற்றும் உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் அனுப்புபவருக்கு பணம் செலுத்தும் பரிவர்த்தனை செய்வதற்கு முன் பெறுநரின் பெயரைச் சரிபார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இப்போது இந்த வசதியை ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் சிஸ்டம் (RTGS) மற்றும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் (NEFT) முறையிலும் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
UPI லைட் என்றால் என்ன?:யுபிஐ லைட் என்பது பயனர்கள் யுபிஐ பின்னை உள்ளிடாமல் ரூ.500 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் அம்சமாகும். இந்த வரம்பு ரூ.1,000 ஆக அதிகரிக்கப்படும், இதனால் பணம் செலுத்துவது இன்னும் சுலபமாகலாம். இதன் பலன்களைப் பெற, பயனர்கள் முதலில் தங்கள் யுபிஐ லைட் வாலட்டில் நிதியைச் சேர்க்க வேண்டும். முன்னதாக, யுபிஐ வாலட்டில் சேர்க்கக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.2,000 ஆகும்.
UPI 123PAY என்றால் என்ன?:யுபிஐ123பே என்பது ஃபீச்சர் ஃபோன் பயனர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சமீபத்திய கட்டண தீர்வாகும்.
யுபிஐ பணம் செலுத்த நான்கு வெவ்வேறு வழிகள் உள்ளன: IVR எண், மிஸ்ட் கால், OEM-எனோபில்ட் சார்ஜஸ், சவுண்ட் பேஸ்ட் டெக்னாலஜி சேவைகள் ஆகும்.
இந்த விருப்பங்கள் மூலம், யுபிஐ123பே ஆனது, ஃபீச்சர் ஃபோன் பயனர்களிடம் ஸ்மார்ட்போன் அல்லது இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், யுபிஐ பரிவர்த்தனைகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் செய்யலாம் என்பதை உறுதி செய்கிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications