இந்திய ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30 மாலை வெளியிட்ட அறிவிப்பின் படி 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யவோ, அல்லது பிற ரூபாய் நோட்டுகளாக மாற்ற அக்டோபர் 7 வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் அக்டோபர் 7 வரையில் கால கெடு முடிந்த பின்பு ரூ.2,000 நோட்டுகளுக்கு என்ன நடக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுவரையில் ஆர்பிஐ, மத்திய அரசு, மத்திய அமைச்சர்கள், ஆர்பிஐ கவர்னர் என யாருமே 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து பேசாத நிலையில் ஆர்பிஐ அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்றுவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30, 2023 முதல் அக்டோபர் 7, 2023 வரை மத்திய வங்கி நீட்டித்துள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 8, 2023 முதல் 2000 ரூபாய் நோடுகளின் நிலைமை என்ன என்பதை 6 முக்கிய பாயின்ட்கள் மூலம் ஆர்பிஐ விளக்கியுள்ளது.
1. அரசு மற்றும் தனியார் வங்கி கிளைகள் உட்பட எந்த இடத்திலும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதையும் / பரிமாற்றம் செய்வதையும் நிறுத்தப்படும்.
2. ரூ.2000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்கள் / நிறுவனங்கள் 19 ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ரூ.20,000/- வரை தொடர்ந்து மாற்றிக்கொள்ளலாம்.
3. தனிநபர்கள்/நிறுவனங்கள் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கொடுத்து, இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் தொகையை மாற்றிக்கொள்ள முடியம்.
4. நாட்டிற்குள் இருக்கும் தனிநபர்கள்/நிறுவனங்கள் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை அரசு தபால் நிறுவனமான இந்தியா போஸ்ட் மூலம் போஸ்ட் வாயிலாக அனுப்பி, இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்காக 19 RBI அலுவலகங்களுக்கு அனுப்பலாம்.
5. இத்தகைய பரிமாற்றம் அல்லது டெபாசிட் அனைத்தும் ஆர்பிஐ / அரசு விதிமுறைகள் இணங்க அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து, ஆர்பிஐ விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நடக்கும்.
6. நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள், அரசுத் துறைகள் அல்லது விசாரணை நடவடிக்கைகள் அல்லது அமலாக்கத்தில் ஈடுபட்டுள்ள பிற பொது துறை அமைப்புகள் தேவைப்படும்போது, எந்த வரம்பும் இல்லாமல் 19 RBI வெளியீட்டு அலுவலகங்களில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்/மாற்றலாம்.
இந்த அனைத்தையும் விட முக்கியமாக 2000 ரூபாய் நோட்டு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின்பும் அதிகாரபூர்வ நாணயமாக கருதப்படும். ஆனால் அக்டோபர் 8 முதல் 2000 ரூபாய் நோட்டுக்கு இணையாக தொகையை பெற வேண்டுமெனில் ஆர்பிஐ அலுவலங்களுக்கு தான் வர வேண்டும். இந்த சலுகையும் அடித்த அறிவிப்பு வரும் வரை தான் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications