சுத்தி சுத்தி அடிக்கும் RBI.. திணறும் வங்கிகள்.. என்ன நடக்குது..?

இந்திய ரிசர்வ் வங்கி வாராக் கடன், வங்கி முறைகேடுகள் அதிகரித்ததை தொடர்ந்து நாட்டின் அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், பின்டெக் நிறுவனங்கள் வரையில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் விதிமுறைகளை மீறும் ஒவ்வொரு வங்கிக்கும் அதிகப்படியான அபராதம் விதித்து கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுத்தி சுத்தி அடிக்கும் RBI.. திணறும் வங்கிகள்.. என்ன நடக்குது..?

இந்த கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் கடைப்பிடிக்க முடியாமல் சிறிய பைனான்ஸ் நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை ஆர்பிஐ-யிடம் திருப்பி ஒப்படைத்து வருவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இதேபோல் சிறிய வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை பிற வங்கிகள் உடன் இணைப்பது அல்லது கைப்பற்றும் படலத்தில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி விதித்த அபராதங்களின் எண்ணிக்கை 88% அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர் கணக்கு தகவல் (KYC) மற்றும் பண சலவை தடுப்பு (AML) விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்று ரிப்போர்ட் கூறுகிறது.

ரிசர்வ் வங்கி அறிக்கைகளின் படி நிதி நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை மேலாண்மை நிறுவனமான Signzy தொகுத்த தகவலில், கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 261 முறை ஆர்பிஐ அபராதம் விதிக்கப்பட்டு ரூ.78.6 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளில் அதிக அளவில் KYC மற்றும் AML விதிமீறல்கள் காணப்படுகின்றன. 2021 முதல் இந்த ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் ரூ.13.5 கோடியும், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் ரூ.20.13 கோடியும் அபராதமாகச் செலுத்தியுள்ளன.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் Fintech நிறுவனங்கள் போன்ற சிறிய நிறுவனங்களில் ஆபத்து மற்றும் தணிக்கை குழுக்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று Signzy நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அங்கித் ரத்தன் கூறினார்.

அபராத தொகை அதிகரிப்பதற்கு முதலும் முக்கியமான காரணம் ரிசர்வ் வங்கியின் கடுமையான கண்காணிப்பும், விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதும் தான். விதிமுறை மீறல் அல்லது பின்பற்றாமல் இருந்தால் எவ்விதமான வித்தியாசம் இல்லாமல் ஆர்பிஐ அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்தில் ஆர்பிஐ Fintech மற்றும் NBFC நிறுவனங்களில் தனது கண்காணிப்பைக் கடுமையாக்கியுள்ளதும் அபராத தொகை மற்றும் எண்ணிக்கை உயர்வுக்கு முக்கிய காரணம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+