ரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..!

மும்பை: இந்தியாவின் பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு வருவதாக பல பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதை வெளிகாட்டும் விதமாகவே ஜிடிபி விகிதமும் ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு பாதாளத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது.

ஒரு புறம் நிபுணர்களும், எதிர்கட்சிகளும் ஆளும் மத்திய அரசை, கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.

மத்திய அரசு இதை மறுத்து வந்தாலும், ஜிடிபி விகிதம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.

நம்பிக்கை குறைந்து வருகிறது

நம்பிக்கை குறைந்து வருகிறது

இந்த நிலையில் தான் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள நுகர்வோர் நம்பிக்கை வாக்கெடுப்பில், நுகர்வோர் நம்பிக்கையானது நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. அதிலும் இது கடந்த 2014 முதல் மிக வீழ்ச்சி கண்டு வருவதாகவும் இந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த ஆண்டான 2014லிருந்தே, இந்தியா மீதான நுகர்வோர் நம்பிக்கை குறைந்து வருவதாக இந்த மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

குறியீடு எவ்வளவு இருக்கிறது?

குறியீடு எவ்வளவு இருக்கிறது?

ரிசர்வ் வங்கி நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கடந்த செப்டம்பரில் 89.4 ஆக நம்பிக்கை குறீயீட்டு மதிப்பு, நவம்பரில் 85.7 ஆக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சியானது ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில் ஆழ்ந்த மந்த நிலை மற்றும் வேலைவாய்ப்பு பற்றி கவலையை அளிக்கிறது. இது வங்கித் துறையில் ஏற்பட்ட நெருக்கடி கடனை கடுமையாக்கியுள்ளது. இது நாட்டின் நுகர்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நுகரிவு பாதிப்பு

நுகரிவு பாதிப்பு

நாட்டில் நுகர்வு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை இது மிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இது பொருளாதாரத்தில் சுமார் 60 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. இதனால் இதுவே அதிகளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைய பங்கு வகித்துள்ளன. இப்படி ஒரு நிலையிலேயே கடந்த செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி விகிதம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படு வீழ்ச்சி கண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த கணக்கெடுப்பானது 13 பெரிய நகரங்களில், 5,334 வீடுகளில் நடத்தப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எதெல்லாம் மதிப்பீடு செய்யப்பட்டது?

எதெல்லாம் மதிப்பீடு செய்யப்பட்டது?

ரிசர்வ் வங்கியின் இந்த கணக்கெடுப்பில் பொதுவான பொருளாதார நிலைமை, வேலை வாய்ப்பு பற்றிய சூழ்நிலை, ஒட்டுமொத்த செலவினங்கள் மற்றும் வருவாய் பற்றிய கணக்கீடுகள் எனப் பலவற்றை குறித்து ஆய்வு செய்யப்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த கணக்கெடுப்பில் பங்கு கொண்டவர்கள், கடந்த ஆண்டிலேயே விலைவாசி அதிகரித்தது. மேலும் இது வரும் ஆண்டிலும் இன்னும் உயரக் கூடும் என்றும் தெரிவித்ததாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணவீக்கம் அதிகரிக்கும்

பணவீக்கம் அதிகரிக்கும்

விலைவாசி அதிகரிப்பால் நாட்டில் பணவீக்கம் இன்னும் அதிகரிக்க கூடும். அதிலும் தற்போதைய காலங்களில் இது அதிகமாக இருக்கக் கூடும் என்றும் கூறியுள்ளனராம். இந்த வீழ்ச்சியிலும் கூட, கடந்த வியாழக்கிழமையன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில், ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியது. ஏற்கனவே ஐந்து முறை வட்டி குறைப்பை செய்த ஆர்பிஐ, அதன் பிரதிபலிப்பை பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியதாக ப்ளூம்பெர்க்கில் செய்திகள் வெளியாகிது குறிப்பிடத்தக்கது.
நாமும் தான் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போமே..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+