சென்னை: வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் வங்கிகள் மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சில வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு லோன்களை வழங்குவதற்கு முன்பே அதற்கான வட்டியை அவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பதைக் கண்டறிந்துள்ளது. எனவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, பிற வங்கிகளிடம் எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு லோன்களை வழங்குகிறது என்பதை மதிப்பாய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வழங்கப்பட்ட லோன்களுக்கு வட்டி மற்றும் பிற கட்டணங்களும் எவ்வாறு வசூலிக்கப்படுகிறது என்பதும் இதில் அடங்கும்.

சில நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சில லோன்களுக்கு அதிக வட்டியை வசூலிக்கின்றன. இதைப் பற்றி தெரிந்தவர்கள் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், தெரியாதவர்கள் இது போன்ற வங்கிகளிடம் சிக்கினால் அவர்கள் செலுத்தும் வட்டி சில நாட்களில், அவர்களின் வருமானத்தையே ஏப்பம் விட்டு விடும். இதனால் ஆர்பிஐ நியாயமான நடைமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
லோன் வாங்குபவர்களுக்கு அனைத்தும் வெளிப்படையாகவும், தெளிவாகவும் லோன் எடுப்பதற்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும் என்பதை ஆர்பிஐ உறுதிப்படுத்த விரும்புகிறது. லோன் பெறுபவர் தங்களுக்கு பணம் எப்போது கிடைக்கும், எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை சரியாக புரிந்து கொண்டு லோன் பெற வேண்டும் என்பதற்காக இத்தகைய நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகள் வங்கிகளின் தவறான நடைமுறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கீழ் காணும் விஷயங்களில் நீங்கள் சிக்கியிருந்தால், தாராளமாக அந்த வங்கிகள் மீது நீங்கள் புகார் அளிக்கலாம். அவை என்ன என்று பார்ப்போம்.
1. சில வங்கிகள் லோன்களுக்கு ஒப்புதல் அளித்த நாளிலிருந்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து வட்டியை வசூலிக்கிறது. இன்னும் சில வங்கிகள் நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து, வாடிக்கையாளர்களிடம் வட்டியை வசூலிக்கும். இதுபோன்ற நியாயமற்ற நடைமுறைகளை தடுக்கும் விதமாக ஆர்பிஐ செயல்பட்டு வருகிறது.
2. வங்கிகள் சில லோன்களை செக் மூலம் வழங்குகின்றன. வாடிக்கையாளர்களுக்கு இந்த செக் கையில் கிடைப்பதற்கு நேரம் எடுத்தாலும், அந்தச் செக்கில் குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து வட்டி கணக்கிடப்படுகிறது. இதனால் உங்கள் கையில் லோன் கிடைப்பதற்கு முன்பே நீங்கள் பணத்தை இழக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
3. அடுத்ததாக ஒரு மாதத்தின் 15 ஆம் தேதிக்குப் பிறகு உங்களின் கையில் லோன் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், சில வங்கிகளில் அந்த மாதத்திற்கான வட்டி முழு மாதத்திற்கும் கணக்கிடப்படுகிறது. இதனால் நீங்கள் கையில் கிடைக்காத லோனுக்கு 15 நாட்கள் சேர்த்து வட்டி செலுத்துகிறீர்கள்.
4. வாடிக்கையாளர்கள் சிலர் தாங்கள் லோன் பெற்ற தொகையை திருப்பி செலுத்தும் போது சீக்கிரம் அடைக்க வேண்டும் என்பதற்காக EMI தொகையுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து அசலில் வரவு வைக்கின்றனர். ஆனால், அவ்வாறு வரவு வைக்கப்பட்டாலும் வங்கிகள் முழு தொகைக்கு ஏற்ப வட்டியை வசூலிக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு சேர வேண்டிய நன்மை போய் சேர்வதில்லை. இது போன்ற கூடுதல் தொகை வாடிக்கையாளரிலிருந்து வசூலிக்கப்பட்டு இருந்தால் அவற்றை திருப்பித் தருமாறு வங்கிகளை ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
இதனை மார்ச் 31ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆன்சைட் பரிசோதனையில் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.எனவே வங்கிகளிடமிருந்து கடன் பெறும் வாடிக்கையாளர்கள் பார்த்து கவனமாக இருங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications