பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab & maharashrtra Cooperative Bank)-ஐ நாம் மறந்திருக்க மாட்டோம். வங்கிக் கணக்கில் இருந்து 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும் எனச் சொல்லிய வங்கி என்றால் நினைவுக்கு வரலாம்.
பிஎம்சி வங்கி நிர்வாகிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், தங்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை உருவானது.

சமீபத்தில் கூட, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து இருக்கும் வாடிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதோடு, பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களைச் சந்தித்த பின், உடனடியாக ஆர்பிஐ ஆளுநரைச் சந்தித்து, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி பிரச்னை தொடர்பாக பேச இருப்பதாகவும் உறுதி அளித்தார். அதோடு மேற்கொண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்தது போல மற்ற வங்கிகளில் நடக்காத வண்ணம் சட்ட ரீதியாக என்ன வழி முறைகள் இருக்கிறதோ அவைகளையும் பார்த்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகச் சொல்லி இருந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பல கட்டப் போராட்டங்களுக்குப் பின் தான் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள். இது கூட போதுமான பணம் இல்லை என்றாலும், ஓரளவுக்காகவது நிலைமையை சரி செய்ய முயற்சித்தது மத்திய அரசு. பிஎம்சி வங்கியைப் போல, இந்தியாவில் இருக்கும் மற்ற நகர் புற கூட்டுறவு வங்கிகள் வந்துவிடக் கூடாது என தற்போது ஆர்பிஐ ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் நகர் புற கூட்டுறவு வங்கிகள் இனி பெரிய அளவிலான கடன்களைக் கொடுக்கக் கூடாது எனச் சொல்லி இருக்கிறது. அதோடு priority sector lending (PSL) என்று சொல்லப்படும் கடன் வகைகளின் இலக்கையும் அதிகரித்து இருக்கிறார்களாம்.
நகர்புற கூட்டுற வங்கிகளின் மொத்த கடன்களில் பாதிக்கும் மேற்பட்ட கடன்களை, யாருக்கு கொடுக்க வேண்டும், எந்த மாதிரியான கடன்களாகக் கொடுக்க வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டு இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications