ஆர்பிஐ வெளியிட்ட 0.50% வட்டி குறைப்பு.. யாருக்கெல்லாம் ஜாக்பாட்..?!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று தனது இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் முக்கிய முடிவை அறிவித்ததுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து 5.75% இலிருந்து 5.50% ஆக நிர்ணயித்துள்ளது.

உலகளாவிய வர்த்தகச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளால் இந்திய பொருளாதார வளர்ச்சி சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், இந்த வட்டி விகிதக் குறைப்பு குறிப்பிடத்தக்க நன்மையை அளிக்கும். ரெப்போ விகிதம் குறைத்தது போலவே CRR விகிதமும் 1 சதவீதம் குறைப்பதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதம், பல்வேறு வகையான கடன்கள் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், பொதுமக்கள் எவ்வாறு இதனால் பயனடைய முடியும் என்பதையும் விரிவாக பார்ப்போம்.

ஆர்பிஐ வெளியிட்ட 0.50% வட்டி குறைப்பு.. யாருக்கெல்லாம் ஜாக்பாட்..?!

வீட்டுக் கடன்கள்: ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு பெரிய நன்மையை அளிக்கும். வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் (HFCs) பொதுவாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்களை மாற்றும். இந்த வட்டி குறைப்பு மூலம், ஏற்கனவே மிதக்கும் வட்டி விகிதத்தில் (Floating Interest Rate) வீட்டுக் கடன் பெற்றவர்களின் EMI குறைய அதிக வாய்ப்புள்ளது.

இந்த வட்டி விகித மாற்றம் கடன் வாங்கியவர்களின் மாதாந்திர நிதிச் சுமையைக் குறைக்கும். மேலும், புதிதாக வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். இந்த 0.50 சதவீத வட்டி விகித குறைப்பு ஒட்டுமொத்த வீட்டு வசதி சந்தையில் புதிய வேகத்தை கொடுக்கும். இதனால் ரியல் எஸ்டேட் துறைில் விற்பனையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனக் கடன்கள்: வீட்டுக் கடன்களைப் போலவே, வாகனக் கடன்களும் இந்த ரெப்போ விகிதக் குறைப்பால் பயனடையும். கார் அல்லது பைக் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள், இப்போது குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற முடியும். இதனால், அவர்களின் மாதாந்திர தவணைகள் குறையும். மேலும் ஏற்கனவே மிதக்கும் வட்டி விகிதத்தில் வாகனக் கடன் பெற்றவர்களுக்கும், மாதாந்திர EMI தொகையில் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு, வாகனத் துறையில் விற்பனையை அதிகரிக்கும்.

தங்க நகை கடன்கள்: சாமானிய மக்களின் இன்ஸ்டென்ட் நிதி ஆதாரமாக இருக்கும் தங்க நகைக் கடன்களின் வட்டி விகிதங்கள், ரெப்போ விகித மாற்றங்களால் நேரடியாகப் பாதிக்கப்படுவது சற்று குறைவு. பொதுவாக, தங்கக் கடன்களின் வட்டி விகிதங்கள், சந்தையில் தங்கத்தின் விலை, வழங்கப்படும் கடனின் தொகை மற்றும் கடன் காலம் போன்ற காரணிகளைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகின்றன.

இருப்பினும், ஆர்பிஐ அறிவிப்பால் ஒட்டுமொத்த கடன் சந்தையில் ஏற்படும் வட்டி விகிதங்கள் குறையும் போது தங்கக் கடன்களிலும் ஒரு சிறிய அளவிலான வட்டி குறைப்புக்கு வழிவகுக்கலாம். ஆனால் இதை உறுதியாக சொல்ல முடியாது. ஏற்கனவே தங்கக் கடன் பெற்றவர்கள், தங்கள் தற்போதைய கடனுக்கான வட்டி விகிதம் குறையவில்லை என்றால், அந்தக் கடனை முடித்துவிட்டு, குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனைப் பெறுவதற்கு, அதே நகையின் பேரில் மீண்டும் கடன் வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.

தனிநபர் கடன்கள்: இன்றைய டிஜிட்டல் வங்கி சேவையில் சில நிமிடத்தில் கடன் வேண்டும் என்றால் பெரும்பாலான மக்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பது தனிநபர் கடன் தான். நாட்டில் பெரும்பாலான மக்கள் தனிநபர் கடன்களை வாங்கியிருக்கும் வேளையில் ஆர்பிஐ-யின் 0.50 சதவீத வட்டி விகித குறைப்பு எவ்வாறு பலன் அளிக்கும். தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்கள் பொதுவாக மற்ற வகை கடன்களை விட அதிகமாக இருக்கும்.

மேலும், இவை பெரும்பாலும் நிலையான வட்டி விகிதத்தில் (Fixed Interest Rate) வழங்கப்படுவதால், ரெப்போ விகிதக் குறைப்பு தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இருப்பினும், புதிதாக தனிநபர் கடன் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு வங்கிகள் சற்று குறைந்த வட்டி விகிதத்தை வழங்கக்கூடும்.

ஏற்கனவே தனிநபர் கடன் பெற்றவர்கள், வட்டி விகிதம் குறையுமா என்று எதிர்பார்த்தால், அதற்கான வாய்ப்புகள் குறைவே. புதிய வட்டி விகித பலனை பெற வேண்டும் என்றால் பழைய கடனை முழுமையாக மூடிவிட்டு, குறைந்த வட்டி விகிதம் வழங்கும் புதிய கடனை பெறலாம். ஆனால், இத்தகைய மாற்றங்களுக்கு பிராசசிங் கட்டணங்கள் இருக்கலாம் என்பதை மறந்துவிடாமல் கவனத்தில் கொள்ள வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+