இந்திய வங்கிகள் இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட சாதனை படைத்துள்ளன என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் அக்டோபர் 23வுடன் முடிவடைந்த 15 நாட்களில் கடன் வளர்ச்சி 5.06 சதவீதம் அதிகரித்து, 103.39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே டெபாசிட் விகிதம் 10.12 சதவீதம் அதிகரித்து, 142.92 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கித் தரவுகள் கூறுகின்றன.

இதே அக்டோபர் 25, 2019வுடன் முடிவடைந்த 15 நாட்களில் வங்கிக் கடன் விகிதம் 98.40 லட்சம் கோடி ரூபாயாகவும், இதே டெபாசிட் விகிதம் 129.78 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
இதே கடந்த அக்டோபர் 9, 2020வுடன் முடிவடைந்த 15 நாட்களில் வங்கிக் கடன் விகிதம் 5.66 சதவீதம் அதிகரித்தும், இதே டெபாசிட் விகிதம் 10.5% சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது.
Non-food bank கடன் வளர்ச்சி செப்டம்பர் 2020ல் 5.8 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 8.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே தொழில்துறைக்கான கடன் வளர்ச்சி 2020ல் நில் வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.7 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது.
இதே விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான கடன் 5.9 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 7 சதவீத வளர்ச்சியாக இருந்தது. இதே சேவைத் துறையில் கடன் வளர்ச்சி செப்டம்பர் 2020ல் 16.6 சதவீத வளர்ச்சியுடனும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 9.2 சதவீத வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன.
தனி நபர் கடன் வளர்ச்சி செப்டம்பர் 2020ல் 9.1 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 7.3 சதவீதமாக இருந்தது கவனிக்கதக்கது.
இதே தனிநபர் கடன் வளர்ச்சி செப்டம்பர் 2020ல் 9.2 சதவீதமும், இது கடந்த செப்டம்பர் 2019ல் 16.6 சதவீதமும் இருந்துள்ளது.


Click it and Unblock the Notifications