சென்னை: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, சமீபத்தில் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டது. ஆனால் தற்போது அந்த பிரச்சனைக்கு விடிவு காலம் வந்துள்ளது. அது என்ன பிரச்சனை.. தற்போது அதிலிருந்து எப்படி வெளிவந்தது என்ற விவரங்கள் குறித்துப் பார்ப்போம்.
என்ன பிரச்சனை?: நாட்டில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக பேங்க் ஆஃப் பரோடா இருக்கிறது. பல்வேறு வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிரத்யேக செயலிகளை அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக 'BoB வேர்ல்ட்' என்ற செயலியை பேங்க் ஆஃப் பரோடா அறிமுகம் செய்தது.

மேலும் அந்த மொபைல் ஆப்-இல், பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வங்கி தரப்பில், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் ஏஜென்ட்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த ஆப்-இல் பல வாடிக்கையாளர்களும் இணைந்துள்ளனர்.
வங்கியின் அறிவுறுத்தலின்படி, அங்குள்ள ஊழியர்கள் சில பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களை விட்டு, பிற மொபைல் எண்களை வைத்து குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கு பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.
மேலும், வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டதில் நிறைய குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது. அதிக அளவிலான தொகை திருடப்பட்டு ஊழல் நடந்ததாகவும் சில நாட்களுக்கு முன்பு அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி, புதிய வாடிக்கையாளர்கள், ஆன்போர்டிங் செய்யப்பட்ட நாளிலிருந்து பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகக் கூறி, வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர்களை, இந்த BoB வேர்ல்ட் செயலியில் சேர்க்கக்கூடாது என வங்கிக்கு உத்தரவிட்டது.
ஆனால் மே 8ஆம் தேதி 2024ஆம் ஆண்டில் வெளியான உத்தரவின்படி, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ஆஃப் பரோடா செயலியான BoB வேர்ல்ட் மீதான கட்டுப்பாட்டை நீக்கி உள்ளது. குறைபாடுகளை சரி செய்ததன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
பொதுவாக வங்கிகள், NBFC நிறுவனங்கள் மற்றும் வங்கிசாரா நிறுவனங்களுக்கும் ஆர்பிஐ சில விதிமுறைகளை விதிக்கின்றது. அதன்பேரில் செயல்படும் வங்கிகளுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. சமீபத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், இன்ஸ்டா EMI கார்டு மற்றும் அதன் இ-காமர்ஸ் தளமான eCOM மூலம் இது போன்ற பிரச்சினையை எதிர்கொண்டது.
டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் போது KFS ஆவணங்கள் முக்கியம் என்கிறது ஆர்பிஐ. ஆனால், அத்தகைய ஆவணங்களை சரிவர பராமரிக்காமல் கடன் வழங்கியதாகக் குற்றம் சாட்டி பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு, இன்ஸ்டா EMI கார்டு மற்றும் அதன் இ-காமர்ஸ் தளமான eCOM மூலம் கடன்களை வழங்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. தற்போது பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் இந்த செயல்முறைகளை மாற்றி அமைத்ததன் காரணமாக ஆர்பிஐ கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications