இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதமானது அதிகரிக்கலாம் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில், பெரும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானது பணவீக்க விகிதம் தொடர்ந்து 6% மேலாக இருந்தும் வரும் நிலையில் வந்துள்ளது. இது 6% மேலாக இருந்தாலும் ஏற்கனவே வட்டி விகிதம் 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த முறை வட்டி அதிகரிப்பு செய்யவில்லை என அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்கியோர் மத்தியில் பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது எனலாம்.
ஏனெனில் ஏற்கனவே கடந்த மே மாதம் முதல் 250 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதமானது அதிகரித்துள்ள நிலையில், வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதமானது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது கடன் வாங்கியோருக்கு மேற்கொண்டு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வந்தது.

இதற்கிடையில் இந்த முறையும் வட்டி அதிகரிப்பு இருக்கும்பட்சத்தில் இது தொடர்ந்து வட்டி விகிதத்தில் அதிகரிப்புக்கு வழிவகுத்திருக்கலாம். அப்படி அதிகரிக்கும்பட்சத்தில் சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் கடன் சுமை என்பது இன்னும் கணிசமாக அதிகரித்திருக்கலாம். ஆனால் இதனை கருத்தில் கொண்டும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தினையும் மத்திய வங்கியானது கருத்தில் கொண்டிருக்கலாம். இது கடன் வாங்கியோர் மத்தியில் மிகபெரிய சர்பிரைஸ் ஆகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாகுறை பற்றியும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கடந்த ஜனவரி -மார்ச் காலாண்டில் மிதமானதாகவே இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது சிறப்பாக நிர்வகிக்ககூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 - 23ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 2.7% ஆக உள்ளது. இதே டிசம்பர் காலாண்டில் 3.7%ல் இருந்து, 2.2% ஆக குறைந்துள்ளது.
இதற்கிடையில் நிபுணர்கள் வட்டி அதிகரிப்பினை மத்திய வங்கியானது செய்யாத நிலையில், இதற்கு பெரும் வரவேற்பினை கொடுத்துள்ளனர்.இது பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக அமையலாம். அதுவும் ஒபெக்கின் முக்கிய முடிவுகளுக்கு மத்தியில் இப்படி அறிவிப்பானது வந்துள்ளது சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications