இந்தியப் பொருளாதாரத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை ஜிடிபி, தொழில் துறை வளர்ச்சி, பணவீக்கம் (விலைவாசி), ஆட்டோமொபைல் விற்பனை போன்றவைகளைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
இந்தியப் பொருளாதாரத்தின் சரிவை சமாளிக்க ஆர்பிஐ வழக்கம் போல, தொடக்கத்தில் இருந்தே களம் இறங்கி போராடிக் கொண்டு இருக்கிறது.
ஆனால் இதுவரை எந்த ஒரு பெரிய பலனையும், இந்தியப் பொருளாதாரம் அடைந்ததாகத் தெரியவில்லை.
2019
கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும், இந்தியப் பொருளாதாரத்தின் சரிவை சமாளிக்க, ஆர்பிஐ தன் வட்டி விகிதங்களை சுமார் 1.35 சதவிகிதம் வரை குறைத்தது. தொடர்ந்து வட்டி விகிதங்களைக் குறைத்தும் இந்தியப் பொருளாதாரத்தில் மத்திய அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும் எதிர்பார்த்த வளர்ச்சி தெரியவில்லை.
பணவீக்கம்
கடந்த 2019-ம் ஆண்டில், சுமாராக ஜூன், ஜூலை மாதத்தில் இருந்து வெங்காயத்தின் விலை மெல்ல ஏற்றம் காணத் தொடங்கியது. வெங்காயத்தின் விலை ஏற்றம் ஒரு கட்டத்தில் டாப் கியரில் தட்டி தூக்கத் தொடங்கிவிட்டது. வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் தொட்டது எல்லாம் நாம் நேரடியாகவே அனுபவித்தோம்.
மேலும் அதிகரிக்கலாம்
கடந்த டிசம்பர் 2019-க்கான சிபிஐ என்று சொல்லப்படுகிற நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (விலைவாசி) 7.35 சதவிகிதமாக இருக்கிறது. இத்தனை அதிகமாக விலை வாசி அதிகரித்து இருக்கும் போது, மேலும் வட்டி விகிதங்களைக் குறைத்தால், அது பணவீக்கத்தை மேலும் அதிகரித்துவிடும் என்கிறது ஆர்பிஐ தரப்பு.
முடியவில்லை
இந்தியாவின் பணவீக்கம் (விலைவாசி) அதிகரித்ததால் ஆர்பிஐ மேலும் தன் வட்டி விகிதங்களைக் குறைத்துக் கொள்ள முடியவில்லை. அதோடு, 1.35 சதவிகிதம் வட்டி விகிதங்களைக் குறைத்த பின்னும், வங்கிகள் இந்த வட்டி விகிதங்களை, வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்று வரை முழுமையாக கொடுத்ததாகத் தெரியவில்லை. ஆர்பிஐ மேலும் வட்டி விகிதங்களைக் குறைக்காமல் இருந்ததற்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
இந்த முறை
2020-ம் ஆண்டுக்கான, மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் இன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில், ஆர்பிஐயின்
வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.15 %-மாகவே தொடரும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications