சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!

ஒரு நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்க வேண்டும் என்றால் பணவீக்கம் குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்களின் நுகர்வின் திறன் அதிகரித்து உற்பத்தி, வர்த்தகம் இரண்டும் வளர்ச்சி பாதையில் இருக்கும்.

இந்த பணவீக்க அளவீடு ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவுக்கு 2 சதவீத அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும், இந்தியாவுக்கு 4-6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். இந்த இலக்கை அடையவே ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது, வட்டி விகிதத்தை மாற்றுவது, தங்கத்தை வாங்குவது என பல பணிகளை செய்து வருகிறது.

சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!

ஆனால் பணவீக்கத்தை உள்நாட்டு பிரச்சனையில் இருந்து வெளிநாட்டு பிரச்சனை வரையில் பல காரணிகள் பாதிக்கும். இதைவிட முக்கியமாக பருவநிலை மாற்றம் பணவீக்கத்தை அதிகம் பாதிக்கும், குறிப்பாக உணவு பணவீக்கத்தை பெரிய அளவில் பாதிப்பதால், இது மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயமாக உள்ளது.

இந்தியாவில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் வேளையில், நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் சேமிப்பையும் வாட்டி வதைக்கப்படுவதாக ஆர்பிஐ அறிக்கை கூறுகிறது.

கடந்த நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சராசரியாக 8% பொருளாதார வளர்ச்சி இருந்த போதிலும், விலைவாசி உயர்வு (பணவீக்கம்) குறைந்து வருகிறது. ஆனால், கடுமையான வெயில் மற்றும் சிக்கலான உலக அரசியல் சூழ்நிலைகள் விலைவாசி உயர்வுக்கும், அதன் மூலம் இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கத்திற்கும் குறுகிய கால அச்சுறுத்தலாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

"உணவு விலை உயர்வு சமீப காலங்களில் சற்று குறைந்துள்ளது போல் தோன்றினாலும், உண்மையில் அதிகமாக உள்ளது. இந்த போக்கு பணவாட்டத்திற்கு அபாயமாகவே உள்ளது," என்று துணை கவர்னர் மைக்கேல் பாத்திரா தலைமையிலான குழுவினால் எழுதப்பட்ட விரிவான அறிக்கையில் ரிசர்வ் வங்கி பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

"இந்த ஆண்டு இயல்பை விட அதிக அளவு தென்மேற்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உணவு பொருட்களின் விலை குறையும். ஆனால், அதற்கு முன்னதாக, பெரும்பாலான உணவு பொருட்களின் விலை உயர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கோடை காலத்தில் கவனமாக கண்காணிப்பது அவசியம்" என்று பொருளாதார வல்லுநர்கள் இந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

இதனால் பருவமழை துவங்கி உணவு பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் வரையில், வெயிலின் தாக்கத்தால் உணவு பொருட்கள் உற்பத்தி குறைந்து, விலை உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் உணவு பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது.

இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index - CPI) மார்ச் மாதத்தில் 4.9% ஆக இருந்தது. டிசம்பர் மாதத்தில் இது 5.7% என்ற உச்சத்தை தொட்டது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தை 4-6% என்ற இலக்கில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவது அவசியம் என்று ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் வலியுறுத்தி வருகிறது. இதன் விளைவாக, இந்தியாவில் விரைவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குறைந்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகளைப் போலவே, இந்திய ரிசர்வ் வங்கியும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் கடனுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான சாத்தியங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+