சர்வதேச நாடுகள் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தினை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்பது சற்றே ஏற்றத்தில் உள்ளது. இந்த விகிதமானது உலக நாடுகள் சரிவினைக் நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது எனலாம்.
இதற்கிடையில் இன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 6.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரெப்பொ ரேட் தவிர இன்னும் சில முக்கிய அறிவிப்புகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆக அது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
வலுவான வளர்ச்சி
இந்தியா தொடர்ந்து வலுவான வளர்ச்சி பாதையில் இருந்து வரும் நிலையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்தான கணிப்பினையும் 6.8%ல் இருந்து 7% ஆக அதிகரித்துள்ளது. இது மிக நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
இதே 2023 - 24ம் ஆண்டில் ஜிடிபி விகிதம் குறித்தான கணிப்பு 6.4% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி அதிகரிப்பு
உலக நாடுகள் பலவும் பல சவாலான காலகட்டத்தில் உள்ள நிலையில், இந்தியா வளர்ச்சி பாதையில் உள்ளது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. அதிலும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருவதற்கு இதுவே சரியான சாட்சியாகவும் இருக்கலாம்.
மற்ற முக்கிய அறிவிப்புகள்?
ரிசர்வ் வங்கியின் இன்றைய கூட்டத்தில் எஸ்டிஎஃப் எனப்படும் Standing Deposit Facility விகிதமானது 6%ல் இருந்து, 6.25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே எம் எஸ் எஃப் எனப்படும் Marginal Standing Facility விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 6.75% வரையில் வட்டி அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பானது 4 பைசா அதிகரித்து, 82.66 ரூபாயாக உள்ளது. இது ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பு, பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு மத்தியில் அதிகரித்துள்ளது.
மற்ற சேவைகள் குறித்த அறிவிப்பு
இது தவிர வெளி நாட்டவர்களுக்கான யுபிஐ பேமெண்ட் சேவை, காயின் வெண்டிங் மெஷின் என சில அறிவிப்புகளையும் கொடுத்துள்ளது. இது வெளி நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும் என பற்பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications