அமெரிக்காவின் கடன் வரம்பு உயர்த்துவது குறித்தும், ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளதை இந்திய ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருகிறது. இதற்கிடையில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது மூலம் ஏற்பட்டு உள்ள மாற்றங்களையும், பாதிப்புகளை தீவிரமாக ஆய்வு உடனடியாக தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தான் RBI பிரின்டிங் பிரஸ் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தியாவில் நான்கு கரன்சி பிரிண்டிங் பிரஸ்களை பயன்பாட்டில் வைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 2000 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக திரும்ப பெறுவதாக அறிவித்து 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் 2000 நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 24 மணி நேரமும் ரிசர்வ் வங்கியின் 4 பிரின்டிங் பிரஸ்-ம் செயல்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் முடிவுக்கு முக்கிய காரணம் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை குறைந்த பட்சம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வார்கள் என கணிக்கப்பட்ட நிலையில் அதிகப்படியான மக்கள் 2000 நோட்டுகளை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்யாமல் மாற்ற முன்வருகின்றனர். இதனால் பண புழக்கத்தை உறுதி செய்யும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை பிற ரூபாய் நோட்டுகளாக தான் மாற்ற முயற்சி செய்கின்றனர். வங்கி கணக்கில் டெபாசிட் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் ஆர்பிஐ வேகமாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை 4 பிரின்டிங் பிரஸ்-ல் அச்சடிக்க முடியும். இதில் ஆர்பிஐ-யின் கிளை நிறுவனமான Bharatiya Reserve Bank Note Mudran Pvt. Ltd கர்நாடக மாநிலத்தின் மைசூரூ, மேற்கு வங்காளம் மாநிலத்தில் சால்போனி ஆகிய இடத்தில் தலா ஒரு பிரின்டிங் பிரஸ் உள்ளது.

ஆர்பிஐ-யின் மற்றொரு கிளை நிறுவனமான Security Printing and Minting Corp. of India Ltd, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் திவாஸ் என்னும் பகுதியில் தலா ஒரு பிரின்டிங் பிரஸ், என மொத்தம் 4 பிரின்டங் பிரஸ் ஆர்பிஐ வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications