சென்னை: சமீப காலமாக RBI, வங்கிகளுக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் விதிமுறைகளை விதித்து வருகிறது. அந்த விதிமுறைகளை மீறியதற்காக ICICI பேங்க் மற்றும் யெஸ் பேங்க் ஆகிய இரண்டிற்கும் ரூ. 1 கோடியே 91 லட்சம் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. அதன் விரிவான விவரங்களை பற்றி பார்ப்போம்.
சமீபத்தில் அக்கவுண்ட்களின் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத காரணத்தினால் விதிக்கப்படும் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை (Minimum balance maintenance charge) இனி விதிக்க கூடாது என்று ஆர்பிஐ உத்தரவிட்டிருந்தது.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தினால், உங்களுக்கு அந்தந்த வங்கிகள் கட்டணங்களை விதித்தால் நீங்கள் ஆர்பிஐ இணையதளத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாத உதவித்தொகை பெறும் கணக்குகள் மற்றும் ஜன் தன் யோஜனா கணக்குகள் ஆகியவற்றிற்கும் இந்த மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை விதிக்கக்கூடாது என்றும் கூறியிருந்தது. தற்போது RBI இதை மீறி கட்டணம் வசூலிக்கும் வங்கிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
யெஸ் பேங்க் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி மினிமம் பேலன்ஸ் பூஜ்ஜியமாக இருந்த வங்கி கணக்குகளுக்கு கட்டணம் விதித்தது. அதேபோல பார்க்கிங் நிதி மற்றும் ரூட்டிங் பரிவர்த்தனைகள் போன்ற விஷயங்களுக்காக வாடிக்கையாளர்களின் பெயரைப் பயன்படுத்தி கணக்குகளைத் திறந்து பரிவர்த்தனை செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி வாடிக்கையாளர்கள் அக்கவுண்டில் பணம் இருந்தால் மட்டுமே சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடியும். ஒரு அக்கவுண்ட் இருப்பு பூஜ்ஜியத்தில் குறைந்தால் வங்கி அதன் சேவைகளை நிறுத்தலாம். ஆனால் கட்டணங்கள் வசூலிக்க கூடாது. மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான கட்டணங்கள் காரணமாக அவர்களுடைய சேவிங்ஸ் சக்கவுண்ட்கள் மைனஸில் செல்லாமல் இருப்பதையும் வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
ICICI பேங்க் பட்ஜெட் ஃபண்டுக்கு பதிலாக நிறுவனங்களுக்கு டேர்ம் லோன்களை வழங்கியதாக ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது. இதனால் யெஸ் பேங்க் மற்றும் ICICI பேங்க் ஆகிய இரண்டும் சுமார் ரூ. 1 கோடியே 91 லட்சத்தை அபராதமாக ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இந்த விதி மீறல்கள் 2022ஆம் ஆண்டுக்கான ஆர்பிஐ இன் மேற்பார்வையின் போது சட்டபூர்வ ஆய்வுக்குப் பின் கண்டறியப்பட்டது. இதற்கு முன்னரே ரிசர்வ் வங்கி விதிமீறல் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது இந்த இரண்டு வங்கிக்கும் அபராதம் விதித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications