மக்களை காப்பாற்ற இதை செய்யுங்க.. முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரங்கராஜன் கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் மிக வேகமாக படையெடுத்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர் என்றே கூறலாம். இது இப்படி ஒரு புறம் மக்களை பாடாய் படுத்தி வருகின்றது எனில், மறுபுறம் பொருளாதார ரீதியாகவும் மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல மதிப்பீட்டு நிறுவனங்களும், உலகப் பொருளாதாரம் மற்றும் இந்திய பொருளாதாரம் பற்றிய கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி ரங்கராஜன் இந்திய பொருளாதாரம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அரசு நிதி ஒதுக்க வேண்டும்

அரசு நிதி ஒதுக்க வேண்டும்

இது குறித்து பிசினஸ் டிடேவில் வெளியான செய்தியில், பொருளாதார வீழ்ச்சியினைக் கட்டுப்படுத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% அரசு ஒதுக்க வேண்டும் என்று மூத்த பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனருமான சி ரங்கராஜன் தெரிவித்துள்ளார். ஆனால் பொருளாதாரம் இருக்கும் நிலையில் 3% ஜிடிபி விகிதத்தினையாவது, அதாவது சுமார் 6 லட்சம் கோடி ரூபாயினையாவது ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜிடிபியை சரியாக கணிக்க முடியாது

ஜிடிபியை சரியாக கணிக்க முடியாது

மேலும் தற்போதைய நிலையில் ஜிடிபி விகிதம் 200 லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம். ஆனால் இதனை ஒருவரும் தற்போது சரியாக கூறிவிட முடியாது. ஏனெனில் ஜிடிபி எவ்வளவு விகிதம் எவ்வளவு என்பதை கணிக்க முடியாது. இது நாம் வைரஸூடன் போராடும் காலத்தினை பொறுத்து இது அமையும் என்றும் கூறியுள்ளார்.

அரசுக்கு முக்கிய செலவு

அரசுக்கு முக்கிய செலவு

மேலும் கொரோனா வைரஸினை எதிர்த்துத் போராடாடுவதற்கான அரசாங்கத்தின் செலவு மூன்று விதகளில் இருக்க வேண்டும். அதில் ஒன்று கொடிய இந்த வைரஸினை எதிர்த்து போராடவும் அதனை குறைக்கவும் ஏற்படும் மருத்துவ செலவுகள் மற்றும் சுகாதார செலவுகள். இதில் மருத்துவமனை வசதிகளை விரிவுபடுத்துதல், கூடுதல் மருத்துவ மற்றும் பாரா மருத்துவ ஊழியர்களை பணியில் அமர்த்துதல், சோதனைக்கான செலவுகள் மற்றும் சோதனை கருவிகள் வாங்கும் செலவுகள், வெண்டிலேட்டர்கள், மற்றும் முக்கியாக முன்னணி சுகாதார பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் என பல செலவுகள் இதில் அடங்கும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி

மற்றொரு செலவு அரசாங்கத்தால் செய்யப்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு வேண்டிய செலவுகள். மேலும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் பலரின் பிரச்சனையினை தவிர்ப்பது. அவர்களுக்கு ஓரளவுக்கேனும் நிவாரணம் வழங்கும். ஆக இது இரண்டாவது முக்கிய செலவாகும்.

வளர்ச்சி இவ்வளவு தான்

வளர்ச்சி இவ்வளவு தான்

தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளில் கூடுதல் செலவுகள் மற்றும் வருவாய் வீழ்ச்சியால் ஈடுசெய்ய முடியாத நிலையே சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. ஆக அரசு இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையின் மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தில் மதிப்பீடு 1.9% ஆக இருக்கும் பட்சத்திலும், இந்தியாவின் வளர்ச்சி 2 - 3% ஆக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI former governor C rangarajan said India needs 3% of GDP for coronavirus stimulus

RBI former governor C.Rangarajan said government's expenditure to fight coronavirus crisis will largely fall in three types.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X