இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் லண்டனில் உள்ள சென்ட்ரல் பேங்கிங் இதழ் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவர்னர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. சென்ட்ரல் பேங்கிங் என்பது ஒரு சர்வதேச பொருளாதார ஆராய்ச்சி பத்திரிக்கையாகும்.
கொரோனா தொற்றுநோய் மற்றும் உலகளாவிய பொருளாதார தடுமாற்றங்கள் போன்ற மோசமான நெருக்கடிகளின் போது இந்தியாவின் பணவீக்கத்தை நிர்வாகம் செய்தது மற்றும் இந்தியாவின் வங்கி கட்டமைப்பை திறமையாக கையாள்வதில் ரிசர்வ் வங்கியின் தலைவராக சக்திகாந்த தாஸ்-ன் பங்கீட்டை பாராட்டி Governor of the Year என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோல் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் மற்றும் உலக நாடுகளுக்கு இந்திய பேமெண்ட் தளத்தை கொண்டு வரும் முயற்சிகள் பாராப்படவேண்டியது எனவும் சிலர் சக்திகாந்த தாஸ் செயல்பாடுகளை பாராட்டினர்.
ரகுராம் ராஜனுக்கு பின்பு சக்திகாந்த தாஸ் சென்ட்ரல் பேங்கிங் இதழின் Governor of the Year என்ற விருதை பெறுகிறார். ரகுராம் ராஜன் 2015ல் இந்த விருதை பெற்றார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கான 4 முதல் 6 சதவீதத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, கடந்த மாதங்கள் வரையில் தனது ரெப்போ விகிதத்தை உயர்த்தியும், நாட்டின் பண புழக்கத்தையும் உறுதி செய்து பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச வளர்ச்சிக்கு வழிவகை செய்தார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.
இதன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு ரீடைல் பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் இருந்த வேளையில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை சுமார் 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது இதன் மூலம் மே மாதம் Retail Inflation 4.25 சதவீதமாக குறைந்துள்ளது, மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் -3.48 சதவீதமாக குறைந்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ரெப்போ விகித உயர்வு மூலம் சாமானிய மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ அதிகரித்து கூடுதல் சுமையாக மாறினாலும், ஆர்பிஐ முயற்சிகள் தற்போது பலன் கொடுத்துள்ளது.
தற்போது பணவீக்க அளவுகள் குறைந்துள்ளதால் 2024 பிப்ரவரி மாத கூட்டத்தில் இருந்து ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை குறைத்துவிடும் என எதிர்ரபார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications