எதிர்பார்த்ததை போலவே வங்கி கடன்களுக்கான தவணைக்கு 3 மாதம் வழங்க ஆர்பிஐ அனுமதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது வருவாயினை இழந்து தவித்து வருகின்றனர். மறுபுறம் வட்டி குறைப்பு செய்யப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பது போல வங்கிகள் கால அவகாசத்தினை கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

மக்களின் எதிர்பார்பினை போலவே மக்களின் சுமையை குறைக்கும் வகையில் வங்கிகளுக்கான ரெபோ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க முடியும்.

மேலும் மக்கள் தங்களது கடனை செலுத்த வங்கிகள் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இதன் அறிக்கை எதுவும் சிபில் ஸ்கோர் அறிக்கையில் பதிவு செய்யப்படாது என பெரிய அறிவிப்பினை கொடுத்துள்ளது. இது மக்களிடையே சற்றே ஆறுதல் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் கோரிக்கை
 

மக்கள் கோரிக்கை

மக்கள் கொரோனாவினால் பயந்து வீடுகளுக்குள்ளே பயந்து, தங்களது வருவாய் , ஊதியத்தினை இழந்து வருகின்றனர். இதன் எதிரொலி அத்தியாவசிய தேவையை கூட நிவர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில், இதற்காக அரசு போதிய அவகாசம் வழங்க வேண்டும். மேலும் வட்டிகள் குறைக்கப்பட வேண்டும். மேலும் மூன்று மாத காலம் கடன் செலுத்தப்படவில்லை எனில், அதனை வாராக்கடனாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கோரிக்கையினை முன் வைத்தனர். .

மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும்

மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும்

அவ்வாறு காலம் கடந்து கட்டும் கடன்களின் அறிக்கை சிபிலில் எதிரொலிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டது. இதன் எதிரொலியைத் தான் தற்போது ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் நாம் பார்க்க முடிகின்றது. இது மக்களுக்கு பெரும் ஆறுதலை தரும் என்றே கூறலாம்,. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் இருக்கும் சலுகைகள் இல்லாவிட்டாலும், இந்திய மக்களுக்கு இது சற்றே ஆறுதலை கொடுக்கும் எனலாம்.

பிரச்சனை இருக்காது

பிரச்சனை இருக்காது

அதிலும் நிறுவனங்களுக்கு இது சற்றே பெரிய ஆறுதலை கொடுக்கு என்றும் கூறப்படுகிறது. ஒன்று போதிய கால அவகாசம் கொடுக்கப்படும். இது திவால் நிலையாவும் எடுத்துக் கொள்ள கூடாது. மேலும் சிபிலில் எதிரொலிக்காது எனும் போது, இது மேற்கொண்டு கடனை வாங்கும் போது அதில் எந்த விளைவும் ஏற்படுத்தாது.

யார் யாருக்கு பயன்
 

யார் யாருக்கு பயன்

சரி இது யாருக்கு எவ்வளவு பயன்? வாருங்கள் அதை பற்றி பார்க்கலாம். ஒருவர் மாதத்தவணையில் ஒரு பொருளை வாங்கியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். மூன்று மாதங்களுக்கு மேல் இஎம்ஐ செலுத்தாவிட்டால் அதனை பொருளை விற்றவர் திரும்ப எடுத்துக் கொள்ளுவார்கள். நாம் முன்கூட்டியே செலுத்திய தொகையும் போச்சு. பொருளும் இழப்பு தான். ஆக மொத்தத்தில் நஷ்டம் பொருளை வங்கியவருக்கே.

கிரெடிட் கார்டு பில்

கிரெடிட் கார்டு பில்

இதே கிரெடிட் கார்டு பில் பற்றி நாம் ஏற்கனகவே அறிந்திருப்போம். கிரெடிட் கார்டு பில்லினை நாம் சரியான நேரத்தில் செலுத்தி விட்டோம் என்றால் பரவாயில்லை. தாமதமாகும் போது, நாம் கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும், அதனைத் தாமதமாகச் செலுத்தும் போது கூடுதல் அபராதம் மற்றும் வட்டி என நாம் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தினை அதற்குத் திருப்பி அளிக்க வேண்டியிருக்கும்.

உபயோகமாக இருக்கும்

உபயோகமாக இருக்கும்

மேலும் ஆரிபிஐயின் இந்த அதிரடி நடவடிக்கையினால், வீட்டுக்கடன் மற்றும் தொழிலதிபர்களும் பெரியளளவில் பயன் அடைவர், ஒன்று வட்டி குறைப்பினார் வட்டியும் குறையும். இதனையடுத்து நிறுவனங்கள் மற்றும் தொழில்சாலைகள் முடங்கியுள்ள நிலை போதிய கால அவகாசமும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆக இது போன்ற அசாதாரன தருணங்களில் இந்த கால அவகாசம் மிக உபயோகமானதாக இருக்கும்.

நிதி அழுத்ததினை குறைக்கும்

நிதி அழுத்ததினை குறைக்கும்

மேலும் நிதி ஏற்கனவே கடுமையான நிதி அழுத்ததில் உள்ள மக்களுக்கு மூன்று மாதம் அவகாசத்தினை வழங்கும்.மேலும் இது கடன் சுமையையும் குறைக்கும். மேலும் மார்ச் 1, 2020 அன்றிலிருந்து செலுத்த வேன்டிய தொகைக்கும் இந்த கால அவகாசம் பொருந்தும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI governor announced all banks to allow a 3 month moratorium on all loans

RBI said banks are allowed to defer interest on working capital repayments by three months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X