ரிசர்வ் வங்கி அதிரடி.. ரெபோவிகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.. கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

நாட்டில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் பலி என்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது வருவாயினை இழந்து தவித்து வரும் நிலையில், வட்டி குறைப்பு செய்யப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பது போல வங்கிகள் கால அவகாசத்தினை கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் வங்கிகளுக்களுக்கான ரெபோ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க முடியும். மக்கள் இதிலிருந்து கொஞ்சமாவது ஆறுதல் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடனுக்கான வட்டி குறைப்பு

கடனுக்கான வட்டி குறைப்பு

இந்த நிலையில் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் வங்கிகளுக்களுக்கான ரெபோ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க முடியும். மக்கள் இதிலிருந்து கொஞ்சமாவது ஆறுதல் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெபோ விகிதம் என்றால் என்ன?

ரெபோ விகிதம் என்றால் என்ன?

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் என்பது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு வட்டி விகிதம் குறையும். இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் மீதான கடன் மீதான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் மக்களை அதிகளவில் பாடாய் படுத்தி வரும் வட்டி விகிதம் குறையலாம்.

வட்டியை குறைக்கலாம்

வட்டியை குறைக்கலாம்

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் விரைவில் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் போது, வீட்டுக் கடன், வாகனக்கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை குறையலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

அதிலும் தற்போது மக்கள் நாட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், இது மக்களுக்கு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர ரிசர்வ் வங்கியின் வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர மக்கள் எதிர்பார்த்தினை போலவே கால அவகாசத்தினையும் கொடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+