இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டம் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று காலை வெளியிடப்பட நிலையில் பலரும் கணித்தது போலவே ரெப்போ வட்டி விகிதத்தில் 9வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணய கொள்கை குழு (MPC) வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாகவே அறிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ். வட்டி விகிதம் குறைக்காமல் இருப்பதற்கு நாணய கொள்கை குழுவில் ஆதரவாக 4 உறுப்பினர்களும், எதிர்த்து 2 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் நாணய கொள்கை கூட்டத்தில் தொடர்ந்து 9வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமின்றி உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே 16 மாதங்களாக இந்தியாவில் ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் என்ற நிலையில் மாறாமல் இருக்கும் வேளையில், அடுத்த 2 மாதமும் இதே வட்டி விகிதங்கள் தொடர உள்ளது.
மேலும் இதற்கிடையே, ஸ்டாண்டிங் டெபாசிட் பேசிலிட்டி (SDF) விகிதம் 6.25 சதவிகிதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் பேசிலிட்டி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75 சதவிகிதமாகவும் மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரெப்போ விகிதம் என்றால் என்ன? : ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது வசூலிக்கும் வட்டி விகிதத்தை ரெப்போ விகிதம் என்கிறோம். இந்த விகிதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வணிக வங்கிகள் நமக்கு கடன் கொடுக்கும். ரெப்போ விகிதம் உயர்ந்தால், நாம் வங்கிகளில் இருந்து வாங்கும் வீட்டுக்கடன், கார்லோன் போன்ற கடன்களுக்கான மாத தவணை அதிகரிக்கும். அதேபோல், ரெப்போ விகிதம் குறைந்தால், நாம் செலுத்தும் மாதத் தவணை குறையும்.
எனவே, ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வணிக வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் வட்டி விகிதமும் குறையும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல், ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால், கடன் பெறும் வட்டி விகிதம் அதிகரிக்கும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
தற்போது ரெப்போ விகிதம் மாற்றாமல் ஆர்பிஐ தனது வட்டி விகிதங்களை வெளியிட்டுள்ள காரணத்தால் வீட்டுக்கடன் வாகன கடன் வாங்கியோரின் வட்டி விகிதம் உயராமல் தற்போது இருக்கும் ஈஎம்ஐ தொடரும். இதேபோல் வைப்பு நிதியின் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது. இதேவேளையில் வங்கிகள் தங்களின் வருமானத்தை உயர்த்தவோ, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவோ வட்டி விகிதத்தை மாற்றம் செய்யலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications