இந்தியாவின் பொருளாதாரம் என்பது 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது, ஒரு குறுகிய கால இலக்கு தான் என முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சி ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தியர்களின் தனி நபர் இலக்குகளை அடைய வேண்டி உள்ளது. இந்தியா அதற்கு பிறகும் 3472 டாலர்கள் வருமானத்துடன் நடுத்தர வருமானம் கொண்ட ஒரு நாடாக இருக்கும்.
இந்தியா உயர்ந்த வருமானம் கொண்ட ஒரு நாடு என்ற நிலையை அடைய, இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். இந்தியா வளர்ந்த ஒரு நாடாக இருக்க வேண்டுமெனில் இந்தியர்களின் வருமானம் மாதம் 13,205 டாலர்களாக இருக்க வேண்டும்.
வளர்ச்சியை அடைய?
இந்தியா 8 - 9% வளர்ச்சியினை அடைய இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆகலாம். ICFAI அறக்கட்டளை பட்டமளிப்பு விழாவில் பேசிய கவர்னர் சி ரங்கராஜன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது பெரிய நாடாக உள்ளது. அதுவே ஒரு பெரிய சாதனை. எனினும் இந்தியாவின் தனி நபர் வருமானத்தின் தரவரிசை படி, 197 நாடுகளில், 142 நாடுகள் உள்ளது.
குறுகிய கால இலக்கு
தற்போது பொருளாதாரத்தின் வளர்ச்சியினை உயர்த்த வேண்டும். 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைவதற்கு ஒரு குறுகிய கால லட்சிய இலக்கு. இதற்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் நீடித்த வளர்ச்சி தேவைப்படும். இந்தியாவின் தனி நபர் வருமானம் 3472 டாலர்களாக மட்டுமே இருக்கும். நாங்கள் இன்னும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்படுவோம்.
இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது
நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. நாம் நிச்சயமாக வேகமாக ஒட வேண்டும் என்பதையே இது காட்டுகின்றது. கொரோனாவுக்கு பின்னர், ரஷ்யா - உக்ரைன் போர், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்காக தெளிவான வரைபடத்தை வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
வளர்ச்சி எப்படியிருக்கலாம்
ஆரம்பத்தில் வளர்ச்சி விகிதத்தினை 7% ஆக உயர்த்த வேண்டும். அதன் பின்னர் 8 - 9% ஆக வளர்ச்சி விகிதத்தினை உயர்த்த வேண்டும். இந்த நீடித்த வளர்ச்சி விகிதத்தை நீடித்ததாக காட்டியுள்ளது. ஆறு முதல் 7 ஆண்டுகள் வரையில் ஆகலாம்.


Click it and Unblock the Notifications