ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பினை போலவே பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
எனினும் தொடர்ந்து வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்க காரணமாக அமையும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் 2023ம் நிதியாண்டில் நுகர்வோர் விலை பணவீக்கம் 4.5% ஆக இருக்கலாம் என ரிசர்வ் வங்கியின் கவனர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம்
நடப்பு காலாண்டில் பணவீக்க விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கும் ரிசர்வ் வங்கி, அடுத்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சற்றே குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே இது குறித்த ராய்ட்டர்ஸ் கணிப்பில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 6% என கணித்துள்ளது.
என்ன காரணம்
சர்வதேச அளவில் தொடர்ந்து பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் என்பது உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகின்றது. தொடர்ந்து விலைவாசி விகிதங்கள் மேலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தினை தொடர்ந்து 10வது முறையாக அப்படி மாற்றாமல் வைத்துள்ளது.
தொற்று நோயின் தாக்கம்
தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்து வருவதும், ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடியான முடிவுக்கு காரணமாக இருக்கலாம். இது கொரோனாவினால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, வட்டி விகிதத்தினை அப்படியே வைத்துள்ளது. இது கடந்த மே 2020ல் இருந்து அப்படியே இருந்து வருகின்றது.
பொருளாதாரம்
இதற்கிடையில் 2023ம் நிதியாண்டின் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8% ஆக இருக்கலாம் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தடுப்பூசி விகிதமும் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் அரசும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை ஊக்குவித்து வருகின்றது. இதற்கிடையில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லாதது மேலும் சாதகமாக அமையலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications