கொரோனா வைரஸ் கடந்த 100 ஆண்டுகளில் உலகின் மிக மோசமான சுகாதார & பொருளாதார பிரச்சனை! ஆர்பிஐ ஆளுநர்!

கொரோனா வைரஸ் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தெரிவித்தார். இதனால் உற்பத்தி, வேலைவாய்ப்புகள் போன்றவைகளில் ஏகப்பட்ட மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. அதோடு, இந்திய பொருளாதாரத்தின் நடுத்தர கால (Medium Term) பொருளாதார அவுட் லுக் குறித்து கவலையும் எழுந்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் கடந்த 100 ஆண்டுகளில் உலகின் மிக மோசமான சுகாதார & பொருளாதார பிரச்சனை! ஆர்பிஐ ஆளுநர்!

7 வது எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார கூட்டத்தில் உரையாற்றிய ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ், தற்போது உலக ஒழுங்குப் போக்கு, உலகளாவிய வேல்யூ செயின், தொழிலாளர் மற்றும் மூலதனங்களை பாதித்துள்ளது என்றார். "இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை, நமது பொருளாதார மற்றும் நிதி அமைப்பின் நிலைத் தன்மை மற்றும் தாக்குபிடிக்கும் தன்மைக்கு வைக்கப்படும் மிகப்பெரிய பரிட்சை" என்று அவர் கூறினார்.

கடுமையான இரண்டு மாத கால லாக் டவுனுக்குப் பிறகு, பொருளாதார செயல்பாடுகளைத் தொடங்கிய பின்பும், இந்திய பொருளாதாரத்தில் நடுத்தர கால அவுட் லுக் நிலையற்றதாக இருக்கிறது. டிமாண்ட் மற்றும் சப்ளை பிரச்சனை இன்னும் பெரிதாக இருக்கிறது என்றார் ஆளுநர்.

மத்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள், இதுவரை பலன் கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால், இன்னும் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டி இருக்கிறது என்றார் ஆளுநர் சக்தி காந்த தாஸ்.

லாக் டவுன் தளர்வுக்குப் பின், இந்தியப் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டி இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய பின், மிகவும் கவனமாக சரியான பாதையில் செல்ல வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.

ஒழுங்குமுறை தளர்வுகளை சார்ந்து இருக்காமல், இந்தியாவின் நிதித் துறை மீண்டும் பழைய படி செயல்படத் தொடங்க வேண்டும். இந்திய வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளுக்கு, இந்த சவாலை சந்திக்கும் திறன் இருக்கிறது எனவும் நம்பிக்கை கொடுத்து இருக்கிறார். இந்த இக்கட்டான நேரத்தில், வங்கிகள், தங்களின் நிர்வாகத்தையும், ரிஸ்க் மேலாண்மையையும் கூர் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.

வங்கிகள் தங்கள் முதலீடுகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், வங்கிகளின் செயல்படாத கடன்கள் அதிகரிக்கும் மற்றும் மூலதன சரிவு (Capital Erosion) நடக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார். தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கு recapitalisation அவசியமாகிறது எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+