உலகப் பொருளாதாரம் மந்தம்தான் தான்.. ஆனால் இந்தியாவில் அந்தளவுக்கு இல்லையாம்..சொல்கிறது ரிசர்வ் வங்கி

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மத்தியில், ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

அதில் வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்கி வருகின்றன. மக்களுக்கு தேவையான சேவைகளை செய்து வருகின்றன எனவும் கூறியுள்ளார்.

கொரோனாவால் நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார சவால் காத்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலைமையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

மற்ற நாடுகளை விட இந்தியா பரவாயில்லை

மற்ற நாடுகளை விட இந்தியா பரவாயில்லை


அதோடு இணைய வங்கி செயல்பாடு, ஆன்லைன் பரிவர்த்தனையில் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. அதுமட்டும் அல்ல போதுமான அன்னிய செலவாணி கையிருப்பு உள்ளது. பிப் 16 முதல் மார்ச் 27 வரை ஜி.டி.பி.யில் 3.2% அளவுக்கு பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறைந்து வருகிறது, ஆனால் அந்தளவுக்கு இந்தியாவில் இல்லை எனவும் சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக தெரிவித்துள்ளார்.

சாத்தியமா

சாத்தியமா

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலத் தான். இந்திய பொருளாதாரம் ஏற்கனவே வீழ்ச்சி கண்டு இருந்த நிலையில், இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 0% ஒரு மதிப்பீட்டு நிறுவனம் குறைத்துள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச நாடுகளின் அளவுக்கு வீழ்ச்சி இருக்காது என கூறியிருப்பது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

வளர்ச்சி விகிதம்

வளர்ச்சி விகிதம்

இந்த நிலையில் அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.4% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஜி20 நாடுகளில் அதிகம் என்றும் கூறியுள்ளார். வளர்ச்சி இப்படி இருக்கும் என்று கூறிய தாஸ், கொரோனா வைரஸால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

போதிய இருப்பு உள்ளது

போதிய இருப்பு உள்ளது

மேலு உணவு தானியங்களாக அரிசி, கோதுமை கையிருப்பு உள்ளது. பணப்புழக்கத்தை அதிகரிக்க, நிதிச்சுமையை குறைக்க பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும்.ரூ.50 ஆயிரம் கோடிக்கு வங்கிகளிடம் இருந்து கடன் பத்திரங்கள் பெறப்படும் என்றும் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறார்.

ரிவர்ஸ் ரெபோ விகிதம் குறைப்பு

ரிவர்ஸ் ரெபோ விகிதம் குறைப்பு

ரெபோ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றாலும், ரிவர்ஸ் விகிதம் என்பது வர்த்தக வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான அடிப்படை வட்டி விக்தம் ரவர்ஸ் வட்டி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் ஆர்பிஐஅந்த ரிவர்ஸ் விகிதத்தினை 25 அடிப்படை புள்ளிகளை குறைந்து, 3.75% ஆக குறைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+