இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், இந்திய நிதித் துறையின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய அமைப்புகளில் ஒன்று மத்திய ரிசர்வ் வங்கி.
கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், சி என் பி சி ஆவாஸ் என்கிற சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தார்.
அந்த பேட்டியில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண்பதற்கும், தற்போது இந்தியப் பொருளாதாரம் இருக்கும் உண்மை நிலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.
முன்பே சொல்லி இருக்கிறேன்
இப்படி இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலைக்கும், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண்பதும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதை பணக் கொள்கை கமிட்டி (Monetary Policy Committee) கூட்டத்தின் போதும், வேறு சில முறையும் இதைப் பற்றிப் பேசி இருக்கிறேன் எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ். அதோடு, இந்த நிகழ்வு உலகம் முழுக்க நிலவி வருகிறது. இது இந்தியாவில் மட்டும் நடக்கும் விஷயம் அல்ல எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
லிக்விடிட்டி பிரச்சனை
உலகம் முழுக்க, நிறைய பணம் லிக்விடிட்டியாக பொருளாதாரங்களில் உட்செலுத்தப்படுகிறது. அது தான் பங்குச் சந்தையை அதி விரைவாக ஏற்றம் காணச் செய்து கொண்டு இருக்கிறது. இந்த பங்குச் சந்தை ஏற்றம், நிச்சயமாக, பொருளாதாரத்தின் உண்மை நிலைக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது என மீண்டும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர்.
ஒரு கரெக்ஷன் வரும்
எனவே பங்குச் சந்தைகளில் ஒரு கரெக்ஷன் வரும். அந்த கரெக்ஷன் எப்போது வரும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இந்தியாவில் நிதி நிலைத் தன்மையை (Financial Stability) உறுதி செய்ய மத்திய ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.
6 ட்ரில்லியன் டாலர்
உலக பொருளாதாரத்தில், கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொண்டு சமாளிக்க, உலகின் பல நாட்டு மத்திய வங்கிகளும் இணைந்து, மொத்தம் 6 ட்ரில்லியன் டாலருக்கு மேல் நிதிச் சந்தையில் பணத்தை உட்செலுத்தி இருக்கிறார்களாம். வட்டி விகிதங்கள் கிட்டத்தட்ட 0 சதவிகிதத்துக்கு குறைத்து இருக்கிறார்களாம். இதில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications