இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், நாட்டின் வங்கித் துறையை மேலும் மேம்படுத்த அரசு கடன் வழங்குநர்களிடம் வலுவான பெருநிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடுமையான நிர்வாக பற்றாக்குறை இண்மையால், அதிக அளவிலான வாராக்கடன், மூலதன பற்றாக்குறைகள், மோசடி மற்றும் போதிய இடர் மேலாண்மை நேர்ந்துள்ளது உள்ளிட்ட பிரச்சனைக்கு இது வழிவகுத்தது என்று தாஸ் அகமதாபாத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகளவிலான வாராக்கடன் களுக்கு வழிவகுக்கும் நிலையில் சரியான கட்டுப்பாடு முறைகள், வணிக மற்றும் இடர் நிர்வாகத்தின் சரியான கட்டுப்பாடு, தணிக்கை மற்றும் தனித்துவமான அறிக்கையிடல் முறைகளை நிறுவுவதன் மூலம் வாராக்கடனை குறைக்க திட்டமிட்டுள்ளது ஆர்.பி.ஐ.
மேலும் வங்கி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் மொத்தம் பொதுத்துறை வங்கிகள் சுமார் 60% அத்துறையை கட்டுப்படுத்துகின்றன.
வாராக்கடன்களின் நிலை சமீபத்தில் குறைந்து விட்டாலும், ஒதுக்கீடு பாதுகாப்பு விகிதம் ஒரு வருடத்திற்கு முன்பு 48.3% இலிருந்து 60.5%-ஆக உயர்ந்துள்ளது. இது வங்கி அமைப்பில் மூலதன போதுமான விகிதம் பாசல் தேவைகளுக்கு மேலாக நகர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் வங்கித் துறை உலகில் அழுத்தப்பட்ட சொத்துகளின் மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளது எரிசக்தி மற்றும் எஃகு போன்ற துறைகளில் கணிசமான அளவு வாராக்கடன்கள் உள்ளன.
இது ஒரு புறம் இருந்தாலும், கேர் ரேட்டிங்க்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 17 வங்கிகள் வாராக்கடன் அளவு 10 சதவிகிதத்தை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே ஐ.டி.பி.ஐ, யூகோ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக்கடன் 19.9 சதவிகிதம் அளவுக்கும், இதே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வாராக்கடன் அளவு 10 சதவிகிததிற்கு குறைவாகவும், இந்தியன் பேங்க், கனரா பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் வாராக்கடன் 2 சதவிகிததிற்கு குறைவாகவும், இதே 8 வங்கிகள் 2- 5% வாராக்கடனும், இதே 5 வங்கிகளின் வாராக்கடன் 5-10%- மாகவும் உள்ளதாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த நிதியாண்டின் இறுதியில் 9.66 லட்சம் கோடி மதிப்புள்ள மொத்த செயல்படாத சொத்துக்கள் (NPA) அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு 6.71 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த விகிதமானது இன்னும் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications