இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று தனது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட உள்ளது. சர்வதேச சந்தையின் வாயிலாக இந்தியா பொருளாதார வளர்ச்சி அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை ஊக்குவிக்க மற்றொரு வட்டி விகித குறைப்பு நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆர்பிஐ வெளியிட்ட 2 இரண்டு வட்டி குறைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்த நிலையில் இன்று 50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று காலை 10 மணிக்கு நாணய கொள்கை முடிவுகளை வெளியிட உள்ளார். இது, ஜூன் 4 ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் நாணய கொள்கை கூட்டம் (MPC) இன்று முடிவடையும் நிலையில், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னர் வெளியிட உள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரிசர்வ் வங்கி முக்கிய ரெப்போ விகிதத்தை தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இன்றைய அறிவிப்பில் மற்றொரு விகித குறைப்பு இருக்குமா என்பது முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களிடையே முக்கிய எதிர்பார்ர்பாக உள்ளது.
பங்குச் சந்தை குறியீடுகள் வியாழக்கிழமை உயர்வுடன் முடிந்தது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வங்கி, ரியல் எஸ்டேட் போன்ற வட்டி விகிதத்தால் பாதிக்கப்படும் துறைகள் உயர்வுடன் இருந்தன. நிஃப்டி 50 குறியீடு 0.53% உயர்ந்து 24,750.90 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 0.55% உயர்ந்து 81,442.04 புள்ளிகளாகவும் முடிவடைந்தன. இந்த உயர்வுக்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) எதிர்பார்க்கப்பட்ட வட்டி விகிதக் குறைப்பு முக்கிய காரணமாக அமைந்தது.
RBI-யின் பணவியல் கொள்கை முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன், வெள்ளிக்கிழமை (இன்று)காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 159.93 புள்ளிகள் சரிந்து 81,282.11 ஆகவும், நிஃப்டி 27.65 புள்ளிகள் குறைந்து 24,723.25 ஆகவும் இருந்தன.
RBI-யின் பணவியல் கொள்கை முடிவுக்கு முன்னதாக, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 12 பைசா சரிந்து 85.91 ஆக இருந்தது. இந்த சரிவு, சந்தையில் நிலவும் எதிர்பார்ப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார காரணிகளால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
நுவாமா அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் (bps) ரெப்போ விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கேர்எட்ஜ் ரேட்டிங்க்ஸ் அறிக்கையில், பணவியல் கொள்கை குழு (MPC) தற்போதைய பொருளாதார வளர்ச்சி மீட்பை ஆதரிக்கும் வகையில் தனது கவனத்தை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications