இந்திய மக்களும், பொருளாதார வல்லுனர்களும் டிசம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் நாணய கொள்கை கூட்டத்தையும், அதை தொடர்ந்து நடக்கும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா திங்கள்கிழமை முன்னணி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அடுத்து நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். இது பொதுமக்கள், தொழிலதிபர்கள், வீட்டுக் கடன் எடுப்பவர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெற்ற MPC கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்க இடம் இருப்பதாக தெளிவாக தெரிவிக்கப்பட்டதாக ஜீ தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார். அதன் பிறகு வந்த பொருளாதார தரவுகளும் வட்டி விகிதம் குறைப்பதற்கான சாத்தியத்தை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் இறுதியாக "வட்டி விகிதத்தை குறைக்க இடம் நிச்சயம் உள்ளது. ஆனால் அடுத்த கூட்டத்தில் நாணய கொள்கை குழு மட்டுமே இதை இறுதி செய்யும், இக்குழுவின் முடிவைப் பொறுத்ததே வட்டி குறைப்பிற்கான அறிவிப்பை வெளியிட முடியும்" என்று சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கினார்.
இந்திய ரிசர்வ் வங்கி 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் MPC குழு மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் அதாவது 1 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு வட்டி குறைப்புகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்திருக்கும் வேளையில் டிசம்பர் மாத கூட்டத்தில் ஆர்பிஐ வட்டி விகிதங்களை குறைக்கலாம்.
அக்டோபர் கூட்டத்தில், இந்தியாவில் பணவீக்கம் அளவு குறைவாக இருக்கும் காரணத்தால் எதிர்காலத்தில் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக MPC குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். கிட்டத்தட்ட இதே நிலையை தான் தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா-வும் தனது பேட்டி மூலம் உணர்த்துகிறார்.
இந்தியாவில் பணவீக்க விகிதம் தற்போது குறைந்து வருவதால் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க ரிசர்வ் வங்கிக்கு இடம் உள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் போது வட்டி விகிதத்தை குறைப்பது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். வங்கிகள் கடன் வட்டியை குறைத்து, தொழில் முதலீடு, வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றை எளிதாக்கும்.
பொதுமக்களுக்கு என்ன பலன்?
வட்டி விகிதம் குறைந்தால் வங்கிகள் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கடன் வட்டி குறையும். வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றின் மாதத் தவணை (EMI) குறையும். மேலும் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று விரிவாக்கம் செய்யலாம். இது புதிய வேலை வாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும். இதேபோல் ஆர்பிஐ சேமிப்பு கணக்கு, வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் சற்று குறையலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications