இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சு வலி காரணமாகச் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவசர நிலை அல்ல என மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன, ஆனாலும் அவரது உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீட்டில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சக்திகாந்த தாஸ் அசிடிட்டி பிரச்சனையை எதிர்கொண்ட காரணத்தால் இன்று காலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணிப்பு செய்வதாக ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அசிடிட்டியால் அவதிப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார், அடுத்த 2-3 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் தலைமையிலான நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் மாதம் 4-6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறைப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், கனடா, ஜப்பான், சீனா என உலகின் பல நாடுகளில் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் வட்டி விகிதம் குறைக்கப்படாமல் உள்ளது.
இதேவேளையில் ரெப்போ விகிதம் குறைக்க முக்கிய காரணமாக இருக்கும் பணவீக்கம் கடந்த மாதம் பெரிய அளவில் உயர்ந்துள்ளதால் வட்டியைக் குறைக்க வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டாலும், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறையவில்லை.
இப்படியிருக்கையில் இந்தியாவில் எப்போது வட்டி விகிதம் குறையும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகையில் 2025 ஆம் ஆண்டு நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் கட்டாயம் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications