அதானி குழும பங்குகள் பெரிய அளவிலான சரிவை பதிவு செய்த நிலையில், இக்குழுமத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள், நிதி அமைப்புகள் குறித்துப் பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில் MPC முடிவுகளை வெளியிட்ட பின்பு ஆர்பிஐ கவர்னர் மற்றும் MPC குழு அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்த போது அதானி குழுமம் குறித்துப் பேசியுள்ளார்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்ட இரு மாத நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்ட நிலையில், அடுத்த இரு மாதத்திற்கு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அதானி குழுமம் குறித்துப் பேசியுள்ளார்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தற்போது சந்தையில் நிலவும் அனைத்து கேள்விக்கான அடிப்படையே அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிவது தான். ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு வைத்து கடன் அளிப்பது இல்லை. ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் பலம் மற்றும் அடிப்படையை நம்பி கடன் அளிக்கிறது.
அப்ரைசல் முறை
மேலும் இந்திய வங்கிகளின் அப்ரைசல் முறை கடந்த சில வருடத்தில் பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது எனவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
சக்திகாந்த தாஸ்
நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். ஆர்பிஐ ஒரு தனிப்பட்ட முறையில் மதிப்பிடும், ரேட்டிங் ஏஜென்சி தனிப்பட்ட முறையில் மதிப்பிடும் என்றும் சக்திகாந்த தாஸ் விளக்கியுள்ளார்.
இந்திய வங்கி அமைப்பு
தற்போது இந்திய வங்கி அமைப்பின் பலம், அளவு ஆகியவை சிறப்பாக உள்ளது. ஆர்பிஐ ஏற்கனவே அதானி குழுமம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. தற்போது கூடுதலாகப் பேச எதுவுமில்லை, மேலும் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பொதுத்தளத்தில் ஆர்பிஐ எப்போதும் விவாதிக்காது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
வங்கி துறை மற்றும் NBFC துறை
இந்திய வங்கிகளின் பலத்தையும், தரத்தையும் மேம்படுத்துவதற்கு ஆர்பிஐ கடந்த 3-4 வருடத்தில் பல முக்கியமான விஷயங்களைச் செய்துள்ளது. இந்த நிலையில் இந்திய வங்கி துறை மற்றும் NBFC துறையும் வலிமையாக உள்ளது எனக் கூற விரும்புகிறேன் எனவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
கடன் வெளிப்பாடு
ரிசர்வ் வங்கி, இந்தியாவில் இயங்கி வரும் உள்நாட்டு வங்கிகளிடம் அதானி குழும நிறுவனங்களிடம் இருக்கும் கடன் வெளிப்பாடு குறித்த விவரங்களை சில நாட்களுக்கு முன்பு கேட்டது. இதைத் தொடர்ந்து எஸ்பிஐ, எல்ஐசி உட்பட அனைத்து வங்கிகளும் அதானி குழுமம் கொடுத்த கடனுக்கு விபரங்களைச் சமர்ப்பித்தது.
ஆர்பிஐ அறிக்கை
இதைத் தொடர்ந்து ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் இன்று நாட்டின் வங்கி அமைப்பு மீள்தன்மை உடனும், நிலையானதாகவும் இருப்பதாகத் தெரிவித்தது. மேலும் போதுமான மூலதன அளவு, சொத்துத் தரம், பணப்புழக்கம், ப்ரொவிஷன் பாதுகாப்பு மற்றும் லாபம் தொடர்பான பல்வேறு அளவீடுகள் ஆரோக்கியமாக உள்ளது.
பெரிய கடன்கள்
வங்கிகளும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட Large Exposure Framework வழிகாட்டுதல்களின் படி இணங்குகிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி Central Repository of Information on Large Credits என்ற தனி டேட்டா பேஸ்-ஐ வைத்துள்ளது. இந்த டேட்டாபேஸ்-ல் 5 கோடி ரூபாய்க்கு அதிகம் கடன் வெளிப்பாடு கொண்ட அனைத்து கடன் விபரங்களையும் சேகரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது என ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications