இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தன் 7-வது வங்கி மற்றும் பொருளாதாரக் கூட்டத்தை (SBI 7th Banking & Economics Conclave) ஆன்லைனில் நடத்திக் கொண்டு இருக்கிறது எஸ்பிஐ.
இந்தக் கூட்டம் ஜூலை 10 & 11 தேதிகளில் ஆன்லைனிலேயே நடக்குமாம். அதை இணையத்தில் இலவசமாக பார்க்க முடிகிறது.
இந்த ஆன்லைன் கூட்டத்தில் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் கலந்து கொண்டு இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசி இருக்கிறார்.
100 வருடங்களில் இல்லாத பிரச்சனை
கொரோனா வைரஸ் தான் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகப் மோசமான சுகாதார மற்றும் பொருளாதார சிக்கல். இதனால் யாரும் எதிர்பாராத அளவுக்கு பொருளாதாரத்தில் உற்பத்தி, வேலை வாய்ப்புகள் என பலதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
சீர்குலைவு
இந்த கொரோனா வைரஸ் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு இருக்கிறது. அதோடு உலக வேல்யூ செயின், தொழிலாளர்கள், முதலீடுகள் என எல்லாவற்றையும் பாதித்து இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ். அதோடு, கொரோனா வைரஸ் பிரச்சனை, இந்தியாவின் பொருளாதாரத்தையும், நிதி அமைப்பையும் சோதிக்கும் மிகப் பெரிய பரிட்சை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
வட்டி விகிதங்கள் குறைப்பு
கடந்த பிப்ரவரி 2019-ல் இருந்து கொரோனா வருவதற்கு முன்பு வரை, ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 1.35 % வரை குறைத்தது. அப்போது இந்தியாவின் பொருளாதார மந்த நிலையைப் போக்க ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைத்தது. மெல்ல பொருளாதாரமும் வளரத் தொடங்கியது. இப்போது ஆர்பிஐயின் மிக முக்கிய நோக்கமே, வளர்ச்சியும், நிதி ஸ்திரத்தன்மையும் தான் எனச் சொல்லி நம்பிக்கை கொடுத்து இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர்.
எதிர்காலம்
இந்திய பொருளாதாரம், மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கான சில அறிகுறிகளைக் காட்டி இருக்கிறது. மிக முக்கியமாக கொரோனா வைரஸ் பிரச்சனையால் வங்கிகளில் செயல்படாத கடன் (NPA - Non Performing Asset) அதிகரிக்கும். அதோடு முதல் தொகை சரியும் (Capital Erosion) எனவும் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ்.


Click it and Unblock the Notifications