இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் கிரிப்டோகரன்சி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சிகளின் மீதான மோகம் அதிகரித்து வருகின்றது. எனினும் இன்றளவிலும் இந்தியாவில் இது இன்னும் நம்பகமான ஒரு முதலீடாக இல்லை எனலாம்.
சொல்லப்போனால் இது ஒரு ஆபத்தான முதலீடு என்ற கருத்தே நிபுணர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
கிரிப்டோ குறித்து எச்சரிக்கை
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் தலைவர் கிரிப்டோகரன்சி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத் தன்மை கண்ணோட்டத்தில் டிஜிட்டல் கரன்சிகள் மிக கவலையை ஏற்படுத்துகின்றன. கிரிப்டோகரன்சிகள் குறித்து இன்னும் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை என எச்சரித்துள்ளார். .
சில்லறை முதலீட்டாளர்கள் ஆர்வம்
இந்த எச்சரிக்கையானது இந்திய முதலீட்டாளார்கள் மத்தியில், குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வரும் இந்த நிலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கிரிப்டோகரன்சி மீதான தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், கிரிப்டோகரன்சிகள் வர்த்தகமானது அதிகரித்துள்ளது.
மத்திய அரசு ஆலோசனை
ஆனால் மத்திய அரசு கிரிப்டோகரன்சிகள் குறித்தான சட்டத்தினை இன்னும் இயற்றவில்லை. இது குறித்து வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றது. பலதரப்பிலும் இது குறித்த கருத்துகளை கேட்டு வருகின்றது. ஆக இது குறித்த தெளிவான நிலைப்பாடு மக்கள் நலன் கருதி விரைவில் வரலாம்.
Array
மேலும் பல கட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு விரைவில் கிரிப்டோகரன்சிகளுக்கான கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம். கடந்த செவ்வாய்கிழமையன்று பிட்காயின் மற்றும் எதர் மதிப்பானது உச்சத்தினை தொட்ட நிலையில், தற்போது மீண்டும் சரிவினைக் கண்டுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பார்க்கும்போது இருமடங்காக அதிகரித்துள்ளது.
பிட்காயின் மதிப்பு
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயின் மதிப்பானது 131% ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் மொத்த கிரிப்டோகரன்சிகளின் மொத்த மதிப்பானது புளூம்பெர்க் அறிக்கையின் படி, 3 டிரில்லியன் டாலருக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
இதற்கிடையில் இந்திய பொருளாதாரம் குறித்து, கொரொனாவுக்கு பின்னர் இதுவரையில் நிச்சயமற்ற நிலையில் இருந்த நிலையில், தற்போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் தான் சென்று கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications