இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 5.5% ஆக மாற்றமின்றி தொடர்ந்து வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. ஆர்பிஐ பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரையில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. தொடர்ந்து மூன்று MPC கூட்டங்களில் ரெப்போ விகிதத்தை குறைத்த நிலையில் தற்போது மாற்றமின்றி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், ஆர்பிஐ SDF விகிதம் மற்றும் மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபசிலிட்டி (MSF) விகிதங்களும் மாற்றமின்றி நிலையாக வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதை தாண்டி ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா 3 முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

UPI சேவை இலவசம் இல்லை:
ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று கொடுத்த விளக்கத்தில், முந்தைய அறிவிப்புகளில் UPI சேவை பயனர்களுக்கு என்றென்றும் இலவசமாக இருக்கும் என்று குறிப்பிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். "UPI சேவையில் செலவுகள் உள்ளன, அவை யாராவது செலுத்த வேண்டும். யார் செலுத்துவது என்பது முக்கியமல்ல, தொடர்ந்து நிலையான சேவையை அளிப்பதற்காக யாராவது செலுத்த வேண்டும். தற்போது அரசு தனது மானியங்கள் மூலம் இதற்கான செலவை சமாளித்து வருகிறது" என்று அவர் கூறினார்.
மேலும், "அரசின் கொள்கைகள், மானியங்கள் UPI-யின் பயன்பாட்டை விரிவுபடுத்த உதவியுள்ளன" என்று சுட்டிக்காட்டினார். இதனால் யூபிஐ சேவையில் சில பிரிவு சேவைகள் மீது கட்டணம் விதிக்கப்பட உள்ளது.
11 மாதம் எந்த பிரச்சனையும் இல்லை:
இந்தியாவின் அன்னிய செலாவணி தற்போது 688.9 பில்லியன் டாலராக உள்ளது, இது இந்திய சந்தைக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய 11 மாதங்களுக்கு போதுமானது என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதேபோல், உலக சேவை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2005-ல் 2% இலிருந்து 2024-ல் 4.3% ஆக இருமடங்கு உயர்ந்துள்ளது, இது மென்பொருள் மற்றும் IT சேவைகளின் வளர்ச்சியால் ஏற்பட்டது.
மேலும், மொத்த நேரடி அன்னிய முதலீடுகள் (Gross FDI) இதுவரை வலுவாக உள்ளது, ஆனால் நிகர அன்னிய முதலீடுகள் ஜூலை 31 வரை 0.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என ஆர்பிஐ இன்று தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வெற்றி:
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டம் அறிமுகம் செய்து 10 ஆண்டுகளை நிறைவுடைந்துள்ளது. இதையொட்டி, ஆர்பிஐ இன்று (ஆகஸ்ட் 6) PMJDY கணக்குகளின் Re-KYC (Know Your Customer) புதுப்பிப்பு தேவைப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த பணிகளை எளிதாக்குவதற்காக, பொதுத்துறை வங்கிகள் கிராமப்புற மற்றும் நகர பகுதிகளில் பஞ்சாயத்து அளவிலான முகாம்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த முகாம்கள் செப்டம்பர் 30 வரை நடைபெறும். இந்த முகாமில் வீட்டு Re-KYC சேவைகள், மைக்ரோ கடன்கள், காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் புகார் தீர்ப்பு வழிமுறைகளை பயனர்களுக்கு வழங்கப்படும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications