இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாக இந்திய ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் ரிசர்வ் வங்கி அதற்கு அபராதம் விதிக்கும்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி எஸ்பிஐ மற்றும் ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகிய வங்கிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இது தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட அறிவிக்கையில் ஆர்பிஐ-யின் குறிப்பிட்ட சில விதிமுறைகளை இந்த வங்கிகள் பின்பற்றவில்லை எனக் கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி 1, 72 ,80, 000 ரூபாயை அபராதமாக விதித்து இருக்கிறது. கடன் வழங்குதல், வாடிக்கையாளர் பாதுகாப்பு , நடப்பு கணக்குகளை தொடங்குவது ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஆர்பிஐயின் குறிப்பிட்ட் சில விதிமுறைகளை எஸ்பிஐ முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விதிமுறை மீறலுக்காக எஸ்பிஐ வங்கிக்கு 1, 72, 80, 000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கிக்கு 1 கோடி ரூபாயை ஆர்பிஐ அபராதமாக விதித்துள்ளது. வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949இல் குறிப்பிட்ட சில விதிமுறைகளை இந்த வங்கி பின்பற்றவில்லை என ஆர்பிஐ குற்றம் சாட்டியிருக்கிறது. நாட்டிற்கான தேசிய நிதிக் கொள்கையை உருவாக்குவது, செயல்படுத்துவது மற்றும் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை ஆர்பிஐ மேற்கொள்கிறது. இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளும் ஆர்பிஐ-இன் கட்டுப்பாட்டின் கீழ் தான் செயல்படுகின்றன.
அந்த வகையில் வங்கிகள் முறைப்படி செயல்படுவது அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவது உள்ளிட்டவற்றை ஆர்பிஐ தான் கண்காணிக்கிறது. இந்த விதிமுறைகளை வங்கிகள் மீறும் போது ஆர்பிஐ அதில் தலையிட்டு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
முன்னதாக ரிசர்வ் வங்கி 5 கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்தது. தமிழ்நாட்டை சேர்ந்த நிக்கோல்ஷன் கூட்டுறவு வங்கிக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கும் நடைமுறைகளில் கேஒய்சி நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்ற புகாரின் பேரில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு சென்ட்ரல் கூட்டுறவு வங்கி, கர்நாடகாவை சேர்ந்த விஸ்வகல்யான் சஹாகரா வங்கி நியத், ஸ்ரீ ஹரிஹரேஸ்வர கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கும் தலா 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவின் ஸ்ரீ வரானா சஹாகாரி வங்கி மீதும் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications