நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி பணப் பரிமாற்றங்களை மிகவும் எளிமையாக்கி இருக்கிறது. இந்தியாவில் யுபிஐ , மொபைல் வாலெட், நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் என பலவற்றின் வாயிலாக நாம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது.
நாம் மேற்கொள்ளும் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் ஓடிபி என்பது முக்கியமான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனையை நாம் அங்கீகரிக்க நம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-ஐ உள்ளிட வேண்டியது கட்டாயம். இது நம்முடைய கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாக்கவும் மோசடிகளில் இருந்து தற்காத்து கொள்ளவும் உதவுகிறது.

இந்நிலையில் ஆர்பிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் என்பது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன்படி டிஜிட்டல் ரீதியிலான பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்கக்கூடிய வகையில் புதிய வழிமுறைகளை ஆர்பிஐ உருவாக்கியிருக்கிறது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இவை நடைமுறைக்கு வரும் என ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நாம் மேற்கொள்ளும் அனைத்து விதமான டிஜிட்டல் பேமென்ட் பரிவர்த்தனைகளுக்கும் two factor authentication எனப்படும் இரண்டு முறை சரிபார்ப்பு என்பது கட்டாயம்.
உதாரணமாக நெட் பேக்கிங்கில் நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்பும் போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அது மட்டுமே உங்கள் பரிவர்த்தனையை செயல்படுத்தி விடாது. இதோடு சேர்த்து நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு, பின் நம்பர், டோக்கன் எண் , கைவிரல் ரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகள் என ஏதேனும் ஒன்றையும் கொண்டு அந்த பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும்.
அதாவது நம் பண பரிவர்த்தனைகளுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பை கொண்டு வருகிறது ஆர்பிஐ. இந்த இரண்டு முறை அங்கீகார சரிபார்ப்பு முடிந்தால் பணம் அக்கவுண்ட்டில் இருந்து போகும். இந்த இரண்டு சரிபார்ப்புகளில் ஒன்று அந்த பரிவர்த்தனைக்கு மட்டுமே செல்லத்தக்க ஓடிபி போன்றவையாக இருக்க வேண்டும் என ஆர்பிஐ கூறியுள்ளது.
எனவே அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இனி ஓடிபி மட்டுமில்லாமல் கூடுதலாக மற்றொரு அங்கீகாரமும் கட்டாயமாகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட்களை பொறுத்த வரை நாம் பணம் பரிவர்த்தனை செய்யும்போது எஸ்எம்எஸ் அடிப்படையிலான ஓடிபிகள் நமது பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வரும். அதனை உள்ளீடு செய்து நாம் பணப்பரிவர்த்தனை செய்து வந்தோம்.
அண்மைக்காலமாக சிம்கார்டுகள் திருடப்படுவது, ஒரு நபருக்கு தெரியாமலேயே அவருடைய போன் ஹேக் செய்யப்படுவது உள்ளிட்டவற்றின் மூலம் மோசடியாளர்கள் இத்தகைய ஓடிபிக்களையும் வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் அவர்கள் போனில் இருந்தே எடுத்து மோசடி செய்கின்றனர். இது போன்ற மோசடிகளை தடுக்கவே ஆர்பிஐ தற்போது இந்த இரண்டடுக்கு பாதுகாப்பு முறையை கொண்டு வந்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications