சிக்கலில் ஆர்பிஐ! ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா!

ஒரு பக்கம் கொரோனா நம்மை வைத்து செய்து கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம் விலை வாசி நம் பர்ஸை சிதைக்கத் தொடங்கி இருக்கிறது.

CPI - Consumer Price Index என்று சொல்லப்படுகிற நுகர்வோர் பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இப்படி இரண்டு பக்கமும் மிகப் பெரிய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆர்பிஐ.

உணவுப் பணவீக்கம்

உணவுப் பணவீக்கம்

Consumer Food Price Index என்று சொல்லும் உனவுப் பணவீக்கம் தான் இந்த ஒட்டு மொத்த நுகர்வோர் பணவீக்கத்தில் ஒரு பெரும் பகுதியாக இருக்கிறது. இந்த உணவுப் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த மார்ச் 2020ல் உணவுப் பணவீக்கம் 7.8 %-மாக இருந்தது. இந்த ஏப்ரல் 2020-ல் 8.6 %-மாக அதிகரித்து இருக்கிறது.

வரலாறு

வரலாறு

கடந்த ஆண்டு, வெங்காயம் விலை ஏற்றம் போன்ற பிரச்சனைகளால், இந்தியாவின் ஒட்டு மொத்த உணவுப் பணவீக்கம் 10. %-த்தை எல்லாம் தொட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 2013-க்குப் பின் இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் அதிகரிப்பது அதுவே முதல் முறை என்பதும் நினைவு கூறத்தகக்து.

விலை வாசி பிரச்சனை

விலை வாசி பிரச்சனை

இந்த விலை வாசியால், மக்கள் வாழ அடிப்படைத் தேவையாக இருக்கும், உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறு பக்கம் நம் மத்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் சிபிஐ பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சரி கட்டுப்படுத்த என்ன செய்யலாம்..?

தீர்வு

தீர்வு

பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஆர்பிஐ தன் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிப்பார்கள். இதனால் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். எனவே பணப் புழக்கம் குறையும், விலை வாசியும் கட்டுக்குள் வரும் என்பது தான் கணக்கு. பிரச்சனை என்ன என்றால், இந்த வட்டி விகித குறைபபி இப்போது செய்ய முடியாது.

ஏன் முடியாது

ஏன் முடியாது

கொரோனா வைரஸ் பிரச்சனையால் தொழில் துறை எல்லாம் இயங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேறு கேள்விக் குறியாக இருக்கிறது. ஆக, தொழில் துறையினர் கையில், எளிதாக பணம் புழங்க வேண்டும் என்றால், குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்திய பொருளாதார வளர்ச்சி விரைவில் பழைய நிலைக்கு வரும்.

கொடுக்க வில்லை என்றால்

கொடுக்க வில்லை என்றால்

ஒருவேளை, ஆர்பிஐ, பணவீக்கத்தை சரி செய்ய, வட்டி விகிதங்களை அதிகரித்தால், தொழில் துறையினர் அதிக வட்டிக்கு கடன் வாங்க தயங்குவார்கள். கடன் வாங்கி கடையை நடத்துவதற்கு பதிலாக, கடையை மூடவும் வாய்ப்பு இருக்கிறது.

வேலை இல்லா திண்டாட்டம்

வேலை இல்லா திண்டாட்டம்

அப்படி பலரும் தங்கள் வியாபாரங்களை மூடினால், கடந்த பல ஆண்டுகளாக தொழில் & வியாபாரம் வழியாக உருவான வேலை வாய்ப்புகள் கணிசமாக காணாமல் போய்விடும். இந்திய பொருளாதாரத்தில் வேலை இல்லா திண்டாட்டம் மேலும் அதிகரித்து விடும். இது மத்திய அரசுக்கு பெரிய தலைவலியாக வந்துவிடும்.

எப்படி சமாளிக்க இருக்கிறார்கள்

எப்படி சமாளிக்க இருக்கிறார்கள்

இன்றைய கூட்டத்தில் ஆர்பிஐ ஆளூநர் உணவுப் பணவீக்கத்தைப் பற்றிப் பேசியது, நினைவு கூறத்தக்கது. அதே நேரத்தில் ரெப்போ ரேட்டையும் 0.4 % குறைத்திருக்கிறார்கள். மேற்கொண்டு வட்டியைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பார்களா அல்லது வட்டியை குறைத்து பணவீக்கத்தை குறைப்பார்களா அல்லது வேறு ஏதாவது ஐடியா செய்து இரண்டையும் சமாளிக்க இருக்கிறார்களா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+