பணவீக்க இலக்கை மாற்ற வேண்டியதில்லை.. அக்டோபர் மாத பணவீக்கம் 7% கீழ் குறையலாம்.. RBI ஆளுநர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணவீக்கம் என்ற ஒற்றை சொல், இன்று உலகினை எந்தளவுக்கு பதம் பார்த்து வருகின்றது, என்பதை நாம் அனுதினமும் செய்திகள் மூலம் படித்து வருகின்றோம். இதனால் தான் உலக வங்கிகள் பலவும் வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் சக்தி காந்த தாஸ், பணவீக்க விகிதம் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் 7% கீழாக இருக்கலாம் என கணித்துள்ளார். இதே கடந்த செப்டம்பர் மாதத்தில் 7.4% ஆக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் 7% ஆக இருந்தது. இது தொடர்ந்து உணவு மற்றும் அதிகரித்து வரும் எனர்ஜி பொருட்களுக்காக செலவினங்கள் உச்சத்தில் இருந்து வந்த நிலையில் பணவீக்கமும் உச்சத்தில் இருந்து வருகின்றது.

தினசரி ரூ.417 போதும்.. ரூ.1 கோடிக்கு நீங்களும் அதிபதியாகலாம்.. பிபிஎஃப் மூலம் எப்படி கோடீஸ்வரராவது? தினசரி ரூ.417 போதும்.. ரூ.1 கோடிக்கு நீங்களும் அதிபதியாகலாம்.. பிபிஎஃப் மூலம் எப்படி கோடீஸ்வரராவது?

மாற்றம் தேவையில்லை

மாற்றம் தேவையில்லை

கடந்த 6 - 7 மாதங்களாகவே பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க மத்திய அரசும், மத்திய வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தன, பணவீக்கமானது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 7% மேலாக காணப்பட்டது. ஆக பணவீக்க இலக்கில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

வளர்ச்சி எதிர்பார்ப்பு

வளர்ச்சி எதிர்பார்ப்பு

ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு பணவீக்க இலக்கினை 2 - 6% குள்ளாக வைக்க கேட்ட நிலையில், மேக்ரோஎக்னாமிக் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் வலுவாக உள்ளன. இது எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பணவீக்கம் மீண்டும் குறையலாம் என்றும் கூறியுள்ளார்.

பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க?

பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க?

பணவீக்க விகிதம் திங்கட்கிழமையன்று வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது. இது 7% கீழாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பணவீக்கம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. அவசியம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அது சரியாக செயல்பட்டுள்ளது.

அமெரிக்காவினை விட சிறப்பாக இருக்கலாம்?

அமெரிக்காவினை விட சிறப்பாக இருக்கலாம்?

அமெரிக்காவின் பணவீக்க விகிதத்தினை விட இந்தியாவின் பணவீக்க விகிதம் சிறப்பாக இருக்கலாம். அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாத விக்தமானது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8% கீழாக குறைந்துள்ளது. எனினும் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் முடியவில்லை என்று தாஸ் எச்சரித்துள்ளார்.

சந்தையில் தாக்கம் இருக்கலாம்

சந்தையில் தாக்கம் இருக்கலாம்

பணவீக்கம் விகிதம், சர்வதேச தரவுகள், அன்னிய முதலீடுகள் என பலவும் வரும் வாரத்தில் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது உள்நாட்டு முதலீட்டாளார்களின் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரவிருக்கும் நாட்களில் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் உச்சம் தொடலாம்?

மீண்டும் உச்சம் தொடலாம்?

கடந்த வெள்ளிக்கிழமையன்றே சென்செக்ஸ் 1181.31 புள்ளிகள் அல்லது 1.91% ஏற்றம் கண்டு, 61,795.04 ஆக முடிவடைந்தது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 18ம் தேதியன்று 61,765.59 புள்ளிகளையும் எட்டியிருந்தது. தற்போது அந்த லெவலை உடைத்துள்ள நிலையில், இது வரும் நாட்களில் மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடு அதிகரிக்கலாம்

முதலீடு அதிகரிக்கலாம்

சர்வதேச அளவிலும் பணவீக்கம் என்பது சற்றே மிதமாக தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சந்தைகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய சந்தையும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அன்னிய முதலீடுகள் சந்தையில் நேர்மறையாக தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI have no idea of revising inflation target: shakikanta Das

Reserve Bank of India Governor Shaktikanta Das has predicted that the inflation rate may remain below 7% last October.
Story first published: Sunday, November 13, 2022, 22:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X