ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மீண்டும் ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 5.9% ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பணவீக்க விகிதம் அதிகரித்து வரும் நிலையில், பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ரிசர்வ் வங்கி இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மற்ற பொருளாதார வளர்ச்சிகள் சாதகமாக இருந்தாலும், பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது.
கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில் , வங்கிகள் விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். குறிப்பாக வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ப்ளோட்டிங் விகிதம் மற்றும் பிக்சட் விகிதமாக இருந்தாலும் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாத தவணை அதிகரிக்கலாம்
வட்டி விகிதம் அதிகரிக்கும்பட்சத்தில் மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம். அதோடு கடன் செலுத்தும் கால அவகாசத்தினையும் நீட்டிக்க வழிவகுக்கலாம். குறிப்பாக சாமானிய மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கம் காரணமாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் மக்கள், இனி வட்டி அதிகரிப்பினாலும் கூடுதல் சுமையை எதிர்கொள்ள நேரிடலாம்.
விழாக்கால பருவத்தில் அதிகரிப்பு
ரிசர்வ் வங்கி கடந்த 5 மாதங்களில் 4வது முறையாக செய்துள்ள வட்டி அதிகரிப்பு இதுவாகும். ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பானது விழாக்கால பருவத்தில் செய்யப்பட்டுள்ள நிலையில், இது இன்னும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விழாக்கால பருவத்தில் கூடுதலாக செலவினை எதிர்கொள்ள வழிவகுக்கலாம்.
கடன் சுமை
புதிய கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கலாம் என்பதால், இது இன்னும் பெரியளவில் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். மொத்தத்தில் விழாக்கால பருவத்தில் மக்களின் சுமையை இன்னும் அதிகரிக்கலாம்.
ஒரு புறம் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கி எடுத்த நடவடிக்கையாக இருந்தாலும், மறுபுறம் இது தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications