இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை அறிவித்து, குட்ரிட்டன்ஸ் கணித்தது படியே ரெப்போ விகிதத்தை 5.5% ஆக மாற்றமின்றி தொடர்வதாக ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.
MPC கூட்டத்தின் முடிவுகளை வெளியிடும் போது இந்த முடிவு ஒருமனதான எடுக்கப்பட்டது என சஞ்சய் மல்ஹோத்ரா அழுசத்தமாக அறிவித்தார். இது ஆண்டில் இதுவரையில் ரெப்போ விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் அல்லது 1 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போதை பொருளதார தாக்கத்தை எதிர்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வர்த்தக சூழ்நிலை இருப்பதாலும் கூடுதல் வட்டி குறைப்பு அவசியம் இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

மேலும், ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா நாட்டிந் சில்லறை பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை நிலைப்பாட்டை 'நடுநிலை' (Neutral) ஆக தொடர்ந்து வைத்திருப்பதாகவும் அறிவித்தார்.
இதோடு கோர் பணவீக்கம் (Core Inflation) 4% ஆக நிலையாக உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை மற்றும் இதர சாதகமான சூழ்நிலைகள் வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பணவீக்க கணிப்புகள்:
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், கோர் பணவீக்கம் சிறிது அதிகரித்து 4.4% ஆக உயர்ந்துள்ளது, இது தங்க விலை உயர்வால் ஏற்பட்டதாகும். சில்லறை பணவீக்கம் நான்காம் காலாண்டில் 4% வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் 2026ஆம் நிதியாண்டில் நாட்டின் சில்லறை பணவீக்க 3.7% இலிருந்து 3.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது, 2026ஆம் நிதியாண்டில் 2ஆம் காலாண்டு பணவீக்கம் 3.4% இலிருந்து 2.1% ஆகவும், 3வது காலாண்டில் 3.9% இலிருந்து 3.1% ஆக மாற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், 4வது காலாண்டு மற்றும் 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டிலும் 4.4% மற்றும் 4.9% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், பணவீக்கத்தின் தற்போதைய நிலையை சரியாக புரிந்து, எதிர்கால பொருளாதார நிலைகளை ஆர்பிஐ சமநிலைப்படுத்தபட்டு உள்ளது.
GDP வளர்ச்சி கணிப்புகள்:
ஆர்பிஐ-யின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி திட்டம் 2026ஆம் நிதியாண்டில் 6.5% ஆக மாற்றமில்லாமல் நிலையாக உள்ளது, இது பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறது.
மேலும் முதல் காலாண்டில் 6.5%, 2ஆம் காலாண்டில் 6.7%, 3ஆம் காலாண்டில் 6.6%, மற்றும் 4ஆம் காலாண்டில் 6.3% ஆக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications