இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு 50 வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைந்து 2023 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த ஜிடிபி-யில் வெறும் 5.1 சதவீதமாக சரிந்துள்ளது. 2022ஆம் நிதியாண்டில் இதன் அளவு 7.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேகாலக்கட்டத்தில் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் நிலுவை, 2022 ஆம் நிதியாண்டில் ஜிடிபி-யில் 3.8 சதவீதமாக இருந்த நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக உயர்ந்து என் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய குடும்பங்கள் மற்றும் SME நிறுவனங்களின் வருமானம் குறைந்த நேரத்தில், பணவீக்கமும் அதிகரித்துள்ள காரணத்தால் தான் சேமிப்பு அளவுகள் 50 வருட அளவில் குறைந்து, கடன் அளவும் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு 2வது உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது என கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் இந்திய குடும்பங்களின் சேமிப்பு மற்றும் கடன் அளவுகள் தற்போது நாட்டின் உடனடி பொருளாதாரம் வளர்ச்சியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேமிப்பு குறைந்துள்ளதால் நுகர்வோர் அளவு பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதால் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் தனியார் துறையின் முதலீடும் கணிசமாக பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் தாமதமாகும் நிலையும் உள்ளது.
இந்த நிலையில் மோத்திலால் ஆஸ்வால் நிறுவனத்தின் பொருளாதார வல்லுனர் நிகில் குப்தா இதுக்குறித்து கூறுகையில் மோசமான வருமான வளர்ச்சி, சேமிப்பு அளவு சரிவு மூலம் அதிகரித்து வரும் கடன் அளவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நிலையற்ற தன்மையை உருவாக்கும் என எதிர்ரபார்க்கப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் நுகர்வோர் அளவு குறைவாக இருக்கும் போது, இதை முதலீட்டு வாயிலாக ஈடு செய்யப்பட்டாலும் இது உடனடியாக பலன் அளிக்காது எனவும் நிகில் குப்தா தெரிவித்தார். மேலும் அடுத்த சில மாதங்கள் இந்தியாவில் பண்டிகை காலமாக இருப்பதால் நுகர்வோர் சந்தை மேம்படும் ஆனால் இக்காலக்கட்டத்தில் இந்தியாவின் கடன் அளவும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications