இந்தியாவில் வாராக் கடன், கடன் மோசடிகள் அதிகரித்து வரும் காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தையும் தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்து வங்கிகளின் நிதி கணக்குகளையும், நிர்வாக முறைகளைக் கடைப்பிடிக்கிறதா என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இந்த வகையில் சமீபத்தில் இந்தியாவில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐ ஆய்வு செய்து வருகிறது, இதன் வாயிலாகச் சில கூட்டுறவு வங்கிகளில் போதுமான நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் சில வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தது, சில வங்கிகள் மீது அதிகப்படியான அபராதமும் விதித்து வந்தது.
இந்த நிலையில் ஆர்பிஐ தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுமார் 13 கூட்டுறவு வங்கிகள் மீது அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி விதிமுறைகளைப் பின்பற்றாத சுமார் 13 கூட்டுறவு வங்கிகள் மீது 50000 ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
13 கூட்டுறவு வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த 13 கூட்டுறவு வங்கி மீதான அபராதத்தில் சந்திராபூரில் உள்ள ஸ்ரீ கன்யகா நகரி சககாரி வங்கிக்கு அதிகபட்சமாக 4 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மாகராஷ்டிரா மாநிலத்தின் பீட்-ல் உள்ள வைத்தியநாத் நகர்ப்புற கூட்டுறவு வங்கிக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் ரூபாய் அபராதம்
இதே போல் சத்ரா பகுதியில் இருக்கும் வை (Wai) அர்பன் கூட்டுறவு வங்கி மற்றும் இந்தூரில் உள்ள இந்தூர் பிரீமியர் கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.50 லட்சம் அபராதம்
பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக, மேகாலயாவில் உள்ள படான் நகரிக் சககாரி வங்கி மற்றும் தி துரா அர்பன் கூட்டுறவு வங்கிக்கு தலா ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் பெரும்பாலும் வங்கிகள், ஆர்பிஐ வங்கிகளுக்காக விதிக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் விதிக்கப்பட்டு உள்ளது.
பிற வங்கிகள்
இந்த அபராதம் பெற்ற வங்கிகள் பட்டியலில் ஜக்தல்பூரில் இருக்கும் நாக்ரிக் சககாரி வங்கி மரியடிட், அமராவதி-யில் இருக்கும் ஜிஜாவ் வணிகக் கூட்டுறவு வங்கி, கொல்கத்தா-வில் இருக்கும் கிழக்கு மற்றும் வடகிழக்கு ரயில்வே கூட்டுறவு வங்கி, சத்தர்பூர்-ல் இருக்கும் ஜிலா சககாரி கேந்திரிய வங்கி மரியடிட், ராய்கர் பகுதியில் இருக்கும் நாக்ரிக் சககாரி வங்கி மரியடிட், பிலாஸ்பூர்-ல் இருக்கும் ஜிலா சககாரி கேந்திரிய வங்கி மரியடிட், ஷாஹ்டோல் பகுதியில் இருக்கும் ஜிலா சககாரி கேந்திரிய வங்கி மரியடிட் வங்கிகளும் அடங்கும்.
விதிமுறைகள்
ஆர்பிஐ திங்கட்கிழமை காலையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுமார் 13 கூட்டுறவு வங்கிகள் மீது அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் பெரும்பாலும் வங்கிகள், ஆர்பிஐ வங்கிகளுக்காக விதிக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் விதிக்கப்பட்டு உள்ளது.
மக்கள்
மேலும் வங்கிகள் தனது வாடிக்கையாளர் உடன் செய்யப்பட்ட வர்த்தகம், பெறப்பட்ட டெபாசிட் ஆகிய நிதி பரிமாற்றம் தொடர்புடையது அல்ல. இந்திய வங்கி சேவைகளை ஊரகப் பகுதிகளில் கொண்டு சேர்க்கும் முக்கியமான பணியை இந்தக் கூட்டுறவு வங்கிகள் செய்யும் நிலையில் வங்கி விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications