ரிலையன்ஸ் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இது நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோரை மீண்டும் நியமனம் செய்தது தொடர்பான தகவலை தாமதமாக வழங்கியதற்காக ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
ஆர்பிஐ விதிகளை பின்பற்றாததற்காக ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி பிரிவு 47(1)(C) கீழ் விதியையும் மீறியுள்ளது. எந்தவொரு பரிவர்த்தனையையும் முடிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவின், ஒழுங்குமுறை விதிமுறைகளையும் ஜியோ பேமென்ட்ஸ் வங்கி மீறியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது தான் காரணம்
ரிசர்வ் வங்கியின் சட்டத்தின் பிரிவு 35 பி -ல் கூறியுள்ளபடி, ஜியோ பேமென்ட்ஸ் வங்கி, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியை மீண்டும் நியமனம் செய்வது குறித்த தகவல்களை பதவிக்காலம் முடிவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பதவிக்காலம் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி இந்த தகவலை வழங்கியுள்ளது.
ஜியோ பேமெண்ட்ஸூக்கு அபராதம்
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விளக்குமாறு உத்தரவிட்டு, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. வங்கியின் பதிலைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட பின்னர், தனிப்பட்ட விசாரணை நடவடிக்கைகளின் போது அந்நிறுவன அளித்த பதில் மதிப்பாய்வு செய்யப்பட்டது, அதன்பிறகு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய பேமெண்ட் வங்கி
இந்தியாவில் முன்னணி நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜியோ, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் ஆறாவது பேமெண்ட் வங்கியாக உருவெடுத்தது. இந்த நிலையில் தான் இப்படி ஒரு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்து ரிலையன்ஸ் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த பேமெண்ட் வங்கி என்ன செய்கிறது?
இந்திய பேமெண்ட் வங்கியானது இது, டெபாசிட்களையும் பரிமாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பேமெண்ட் வங்கியாகும். இது டெபாசிட்களை ஏற்றுக் கொள்ளூம் ஒரு சிறப்பு வங்கியாகும். எனினும் இது கிரெடிட் உள்ளிட்ட கடன்களை வழங்க முடியாது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இடையேயான கூட்டு நிறுவனமாகும். இது 70: 30 என்ற விகிதத்தில் பங்குகளைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications