ரிசர்வ் வங்கி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.72 லட்சம் அபராதமும், தனியார் துறை கடன் வழங்கும் முன்னணி நிதி நிறுவனமான பெடரல் வங்கி-க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இந்தியாவில் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை விதிமுறை மீறல், கணக்குகளை வங்கி விதிமுறைக்கு சரியாக இணங்குகிறதா, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையில் முறைகேடு ஏதும் நடக்கிறதா என்ற பல கோணத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதன் படி பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பெடரல் வங்கி சில ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் அதிகப்படியான தொகையை அபராதமாக விதித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பெடரல் வங்கி தவிர, இதே ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் கொசமட்டம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ரூ.13.38 லட்சம் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள், 2016 இன் சில விதிகளுக்கு இணங்காததற்காக மெர்சிடஸ் பென்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் (முன்னர் Daimler Financial Services India Private Ltd) மீது RBI ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் 'முன்பணம் மீதான வட்டி விகிதம்' மற்றும் 'வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை' தொடர்பான சில விதிகளுக்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
KYC விதிமுறைகளின் சில விதிகளை மீறியதற்காக பெடரல் வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications